Take a fresh look at your lifestyle.

Kanneera Movie Review

87

உத்ரா புரடக்ஷன்ஸ் ஹரிஉத்ரா தயாரிப்பில் கதிர் ராவன் இயக்கத்தில் கதிர் ராவன்,எஸ் சந்தினே கவுர்,மாயா கிளாமி, நந்தகுமார் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கண்நீரா.   
கதை               
மித்ரன் மற்றும் ஸ்ரீஷா, அருண் மற்றும் நீரா ஆகிய இரண்டு ஜோடிகளின் வாழ்க்கையை அழகாக சொல்லியிருக்கும்படம். தொழில்முறை நிபுணரான நீரா, மித்ரனின் தலைமையின் கீழ் பணிபுரியத் தொடங்குகிறார், அதே நேரத்தில் அவரது பைலட் காதலன் அருண் இங்கு சரியான வேலை கிடைக்காததால் துபாய்க்கு வேலை கிடைத்து செல்கிறார். அங்கே வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு தன் காதலி நீராவிடம் சொல்கிறார். நீராவோ தன் தாய் தந்தை உள்ள ஊரிலேயே வாழலாம் என்கிறார். அதற்கு மறுக்கிறார். இந்த சூழ்நிலையில்  மித்ரன் தன் காதலி திருமணத்துக்கு உடனே சம்மதிக்காததால்தன் காதலை பிரேக்கப் செய்து நீரா மீது ஆசைப்பட்டு தான் காதலிப்பதாக சொல்கிறார். நீரா மறுக்கிறார். முடிவில் நீரா மித்ரனை மணந்தாரா? தான் காதலித்த அருணை மணந்தாரா? என்பதை படத்தின் மீதிக்கதை.   
கதிர் ராவன் எஸ்., சந்தினே கவுர், மாயா கிளாமி, நந்தகுமார் நால்வரும் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். ஹரிமாறன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. Yehganesh Nair ன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
கௌசல்யா நவரத்தினம் கதையை இயக்குநர் கதிர் ராவன் எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் பாராட்டுக்கள்.