Take a fresh look at your lifestyle.

Nilavukku Enmel Ennadi Gopam Movie Review

107

 

தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த ‘ராயன்’ படம்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.  அனிகா சுரேந்தர்,  பிரியா பிரகாஷ் வாரியர் , ரம்யா   ரங்கநாதன் , ஆடுகளம் நரேன் , சரண்யா பொன்வண்ணன் , சரத்குமார் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கம் படம்  நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் . பிரியங்கா  மோகன் , ஜி.வி பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கதை

நாயகன் பிரபு   காதல் தோல்வியில் காதலியின்  நினைவாக கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவருகிறார் அவனை   இதில்     இருந்து    வெளியில்  கொண்டு வர ஒரு  பெண்ணை  திருமணம் செய்துவைக்க முடிவு  செய்கிறார்கள்  அவனது  பெற்றோர்கள்.  அரை மனதாக பெண் பார்க்க செல்லும் பிரபு பெண்ணாக இ ரு ப்பது தனது ஸ்கூல் மேட் பிரியா பிரகாஷ் வாரியார்.  . இருவரும் கொஞ்ச நாள் பேசி பழகிய  பின் கல்யாணம்     பண்ணிக்கலாமா வேண்டாமா என்கிற முடிவுக்கு     வர  திட்டமிடுகிறார்கள். சரியாக திருமணத்திற்கு ஓக்கே சொல்ல   இருக்கும் நேரத்தில்  அவனது எக்ஸ் நல்லவர்    நிலா   (அனிகா சுரேந்த           ர்) திருமண பத்திரிக்கை அவனுக்கு வந்து சேர்கிறது. அந்த கல்யாண பத்திரிக்கையை கல்யாணம் பண்ண இருக்கும் பெண்ணிடம் காட்டுகிறார். அவள் காதல் பிளாஷ்பேக் கதையை கேட்க சொல்கிறார் பிரபு. ஃபிளாஷ்பேக் செஃப் ஆக வேண்டும் என்கிற கனவில் படிக்கும் பிரபுவும் பெரிய பணக்கார வீட்டு பெண்ணான நிலாவும் தன் நண்பனின் நிகழ்ச்சியில் சந்தித்து கொள்கிறார்கள். அந்தநிகழ்ச்சியில் நாயகன் செஃப் ஆக இருக்க நாயகிக்கு. சமைத்து கொடுத்து ஹீரோயினை இம்பிரஸ் செய்கிறார்.அதன்பிறகு இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. பிரபுவின் வீட்டில் கிரீன் சிக்னல் தருகிறார்கள். ஆனால் நிலாவின் அப்பாவாக வரும் சரத்குமார் ரெட் சிக்னல் போடுகிறார். கதாயகி பிரபுவை மணந்தே தீரவேண்டும் என்று அடம் பிடிக்க  சரத்குமார் ஒரு கண்டிஷன் போடுகிறார். அந்த கண்டிஷன் என்ன? அந்த கண்டிஷனை பிரபு ஏற்று நிலாவை மணந்தாரா? இல்லையா?  பிரபு தனது வீட்டில் பார்த்த கிளாஸ்மெட் பெண்ணையே திருமணம் செய்துகொண்டாரா?என்பதே படத்தின் மீதிக்கதை

கதாநாயகனாக பவிஷ் ஆள்தோற்றமும் அழகும் அவரை சினிமாவில் கதாநாயகனாக நிலைநிறுத்தும். நன்றாக நடனம் ஆடி  நடிக்கவும்  செய்திருக்கிறார்.   அனிகா கதாநாயகியாக சிறப்பாகநடித்துள்ளார்.மேத்யு தாமஸ் காமெடியனாக முயற்சி செய்து தன்னைதானே டேமேஜ் செய்துகொள்கிறார்.வெட்டிங் பிளானராக வரும் ரம்யா ரங்கநாதன் தடிப்பும் அருமை.  பிரியா பிரகாஷ் வாரியர் , ரம்யா   ரங்கநாதன் , ஆடுகளம் நரேன் , சரண்யா பொன்வண்ணன் , சரத்குமார்  என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். பிரியங்கா  மோகன் ஒரு பாடலுக்கு வந்தும் ஜி.வி பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் வந்தும் நம்மை ரசிக்க வைக்கிறார்கள்.  ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பு. ஒளிப்பதிவு அருமை.

எடுத்த எடுப்பிலேயே லவ் ஃபெயிலியர் சாங் , நான் சிங்க் காமெடி , சம்பிரதாயத்திற்கு நகரும் காட்சி என செம கடுப்படிக்கிறது படம். சரி ஃபிளாஷெபேக் ஆவது புதுசா இருக்கும் என்று பார்த்தால் அதுவும் போர். இரண்டாம்பாதிகொஞ்சம் ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் தனுஷ். எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம் வரும். தனுஷ் வழக்கமான காதல்கதையை ரசிக்கும்படி சுவாராஸ்யமாகசொல்லியிருக்கவேண்டாமா?  எனிவே இன்றைய காதலர்களுக்கு பிடிக்கும்.