மாஸ் …மாஸ் …மாஸ் இதுக்கு மேல என்னங்க சொல்ல, தல அஜித் ரசிகர்களுக்கு இதுக்கு மேல ஒரு மாஸ் படம் கொடுக்க முடியுமா என்ன… அது கொஞ்சம் சந்தேகம் தான்.. ரசிகனுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இந்த படம். ஒரு வரியில இந்த படத்தை பத்தி சொல்லனும்னா லாஜிக் இல்ல மேஜிக்.
என்ன… இது ஒரு கேங்ஸ்டர் கதை தானே என்ன இருந்திட போகுது வெட்டு குத்து ரத்தம் இப்படி நம்ம பார்த்து பார்த்து அலுத்து போன கதையாக தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனா அதுக்கு நேர்மாற தல அஜித்தின் பிரேம் பைக் பிரேம் ஸ்டைல் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் தோய்வே இல்லாத துவம்சம் செய்யும் ஒரு அல்டிமேட் மாஸ். ஏ.கே.வாக தோன்றி ரெட் டிராகனாக மாறி வரும் காட்சிகள் சீட்டு நுணுக்கி நம்மளை அமர வைக்கிறது.
இந்தப் படத்தில் பெரிய கதையெல்லாம் ஒன்றும் இல்லை இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் ரசிகர்களில் தானும் ஒரு ரசிகராக இயக்குனர் எடுத்திருக்கும் படம்
ஏகே ஒரு பெரிய கேங்ஸ்டர் என்று தெரிந்தும் அவரை கல்யாணம் செய்து கொள்ளும் த்ரிஷா தன் குழந்தை பிறக்கும் போது அந்த ஆஸ்பிட்டலில் ஒரு அட்டாக் நடக்கிறது அப்பொழுது தன் கணவனால் தன் குழந்தைக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்த த்ரிஷா ஏகே வை போலீசில் சரணடைய சொல்கிறார் ஏ கேவும் சரணடைகிறார்.
18 வருட சிறை தண்டனைக்கு பிறகு தன் மகனுக்காக ஊர் திரும்பும் ஏகே. அப்பொழுதும் கேங்ஸ்டர்களால் அட்டாக் நடக்கிறது. மீண்டும் பயந்து போன த்ரிஷா நீ பழைய பன்னீர்செல்வம் கிடையாது எல்லாத்தையும் விட்டுட்டு வா என்கிறாள் நான்தான் எல்லாத்தையும் விட்டு விட்டேனே என்று ஏகே சொல்ல இல்ல நீ இன்னும் விடல இன்னும் ஏகேவா தான் இருக்க என்று சொல்லி மீண்டும் பிரிகிறாள்.
தீனா , மங்காத்தா அந்த படங்களில் அஜித்தை எப்படி பார்த்தோமோ அதே விண்டேஜ் தரத்தில் அஜித்தை காட்டி இருக்கிறார் இயக்குனர். உதாரணத்திற்கு அஜித்தின் முதல் சீனில் ஒரு ஷட்டரை திறந்து கொண்டு அஜித் வரும் போது ஷட்டர் சிக்கிக் கொள்கிறது அப்போது எதிரில் இருக்கும் வில்லன் எங்கடா தலையை காணோம் என்று சொல்லும் போது கேட்டதே…. அதிரும் சத்தம் அப்பொழுது அஜித்தை காட்ட விசில் பறக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன், பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் வர்மா, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் அசத்தியிருக்கிறார் மேலும் பழைய விண்டச் சாங்குகளான இளமை இதோ இதோ என்னும் சாங், ஒத்த ரூபா தர சாங், தூள் கிளப்புகிறது மேலும் சிம்ரனின் ஆக்டிங்கும் வில்லன்களின் காட்சிகளும் கிங் ஸ்டில் யோகி பாபு என்று எந்த கேரக்டரையும் சோடை போக விடாமல் பயன்படுத்தி இருக்கிறார்கள் அஜித்தின் மௌனமான காமெடிகள் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.படத்தின் கிளைமாக்ஸ் சூப்பர் அது இங்கே தெரிந்து கொள்வதை விட தியேட்டரில் போய் பாருங்கள்.
மொத்தத்தில் படத்தில் அஜித்தின் ரசிகர்களின் அதிர்வு ஆதரவும் அதிகமாக தெரிகிறது.