Take a fresh look at your lifestyle.

சென்னையில் நடைபெற்ற புரோவோக் கலைத் திருவிழா 2026

10

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் புரோவோக் கலைத் திருவிழா 2026 நடைபெற்றது,

புரோவோக் நிறுவனர் அஸ்வினி ஷாம்பால் மற்றும் சாம்பல் தலைமையில் நடைபெற்ற திருவிழாவில், புகழ்பெற்ற கலைஞர்களும், படைப்பாற்றல் மிக்க
எல்.நரேந்திர குமார் மற்றும் குழு,அஸ்வத் நாராயணன், பரத் சுந்தர், சுமேஷ் நாராயணன், ராஜீவ் முகுந்தன்
உள்ளிட்ட ஆளுமைகளும் மேடையேறிய வசீகரமான கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

கலைத்துறையில் நீங்காத முத்திரை பதித்த ஜாம்பவான்களை அங்கீகரிக்கும் ஒரு தளமாகவும் இந்த தளம் திகழ்ந்தது, இதில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்’ வழங்கி கௌரவித்தது

முதல் நாள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருதுகள் விவரம்:-

புரோவோக் கலை விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது, புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர், ஆய்வாளர், நடன அமைப்பாளர் மற்றும் எழுத்தாளர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்களுக்கு
வழங்கப்பட்டது.

புகழ்பெற்ற இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் காயத்ரி வீணை வித்வான் வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பிரபல நடன அமைப்பாளர் மற்றும் இயக்குநர் பிருந்தா மாஸ்டர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

புரோவோக் ஆர்ட் ஃபெஸ்டிவல் 2026′ அனைத்துத் தரப்பு மக்களும் இதில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

அற்புதமான கலைஞர்களையும் கொண்டாடும் நோக்கத்துடன் இந்த விழா தொடங்கப்பட்டது. கலைத் திறனை வெளிப்படுத்தவும், கலந்துரையாடல்களை ஊக்குவிக்கவும், இந்தியாவின் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலைப் பாரம்பரியத்தைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்க்கவும் ஒரு தளத்தை உருவாக்குவதே இந்த விழாவின் இலக்காகும்.