டாக்டர் சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் ‘சிவண்ணா எஸ்சிஎஃப்சி01’பான் இந்தியா படமாக உருவாகிறது

89

சிவண்ணா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கன்னட சூப்பர்ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரியுடன் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். சிவராஜ் குமாரின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கான்செப்ட் போஸ்டர் ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டது.

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் எஸ்சிஎஃப்சியின் (சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி) இந்த பான் இந்தியா திரைப்படத்தை விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தைத் இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார்.

‘சிவண்ணா எஸ்சிஎஃப்சி01’ (#ShivannaSCFC01) என்று அழைக்கப்படும் இத்திரைப்படம் அதிக பொருட்செலவில் வலுவான தொழில்நுட்ப கூட்டணியுடன் உருவாகிறது. ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘கைதி’ புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள டாக்டர் சிவராஜ் குமாரின் கான்செப்ட் போஸ்டர் மூலம் இத்திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் என்பது அறிய முடிகிறது. சிவராஜ் குமாரின் கெட்டப்பும் போஸ்டர் வடிவமைப்பும் படம் பற்றிய ஆர்வத்தை உருவாக்குகிறது.

தென்னிந்திய திரைப்பட துறையை சேர்ந்த பிரபல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள். இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

நடிகர்கள்: டாக்டர் சிவராஜ் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: கார்த்திக் அத்வைத்
தயாரிப்பாளர்: சுதீர் சந்திர பாதிரி
பேனர்: எஸ் சி எஃப் சி (சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி)
இசை: சாம் சிஎஸ்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்