’கொலை’ விமர்சனம்

126

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த் சங்கர்
இசை : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன்
இயக்கம் : பாலாஜி குமார்
தயாரிப்பு : இன்பினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் – லோட்டஸ் பிக்சர்ஸ்

அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல மாடல் லைலா கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ரித்திகா சிங்கிற்கு, முன்னாள் காவல்துறை அதிகாரியும், துப்பறிவாளருமான விஜய் ஆண்டனி உதவி செய்கிறார். இருவரும் சேர்ந்து மேற்கொள்ளும் கொலை வழக்கு பயணிக்கும் விதமும், கொலையாளி யார்?, எதற்காக கொலை செய்தார்? போன்ற கேள்விகளுக்கான விடையும் தான் ‘கொலை’ படத்தின் மீதிக்கதை.

விநாயக் என்ற வேடத்தில் துப்பாறிவாளராக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, வழக்கு விசாரணையை மேற்கொள்லும் விதம் மற்றும் அவருடைய நடிப்பு படத்தை ரசிக்க வைக்கிறது. ரித்திகா சிங் ஸ்டைலிஷான போலீஸாக நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியை போல் அவரும் எந்தவித அலட்டல் இல்லாமல் அமைதியாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். மாடல் லைலா என்ற வேடத்தில் நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி, மாடல் அழகி கதாபாத்திரத்தில் சரியான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.

அர்ஜுன் சிதம்பரம், ஜான் விஜய், சித்தார்த் சங்கர், முரளி சர்மா என்று படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

வழக்கமான க்ரைம் த்ரில்லர் ஜானர் கதையை திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் வித்தியாசமான முறையில் நகர்த்தி செல்லும் இயக்குநர் பாலாஜி குமார், படம் முழுவதையுமே ஸ்டைலிஷாக இயக்கியிருக்கிறார்.

சிவகுமார் விஜயின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. படம் முழுவதும் ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றாலும், அது தெரியாதவாறு லைட்டிங் செய்து காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

கிருஷ் கோபாலகிருஷ்ணனின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் புதிய கருவிகளை பயன்படுத்தி வித்தியாசமான பீஜியம்களை கொடுத்திருக்கிறார்.

சாதாரண க்ரைம் த்ரில்லர் கதை தான் என்றாலும் அதை மேக்கிங் மூலம் வித்தியாசமான மற்றும் புதுவிதமாக கொடுத்திருக்கும் இயக்குநர் பாலாஜி குமார், படம் முழுவதும் அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறார்.

ரேட்டிங் 3.5/5