ஆலகாலம் திரைவிமர்சனம்
ஜெயகிருஷ்ணா இயக்கத்தில் ஜெயகிருஷ்ணா, சாந்தினி, ஈஸ்வரிராவ், தீபா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் .ஆலகாலம்* உருகுலைக்கும் ஓர் உண்மையின் கருவை மையமாக வைத்து உருவாகி வெளியாகியிருக்கிறது. தயாரிப்பு. ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்.
ஏப்ரல் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த ஆலகாலம் திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்
கதை
ஆலகாலம்* என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுருத்திக் கொண்டிருக்கிறது, இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில். இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையை சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி என்பதுதான் ஆலகாலம் கதை. இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா ? தாயின் லட்சியம், இளைஞனின் முயற்சி, காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா என்பதே ஆலகாலம் திரைப்படம் சொல்லும் கதை
ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். சாந்தினி கல்லாரி மாணவியாக, காதலியாக, மனைவியாக என கொடுத்த கதிபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ் இப்படத்தில் அம்மாவாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அம்மா கதாபாத்திரத்தில் ஈஸ்வரபிரசாத் சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். தீபா, தங்கதுரை, சிசர் மனோகர் என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. கா. சத்தியராஜ், ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்
காதலும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக இப்படத்தை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் ஜெய கிருஷ்ணா .பாராட்டுக்கள்.