Era
E N T E R T A I N M E N T
வழங்கும்,
இரா.சரவணன்
தயாரிப்பில்
TRIDENT ARTS
ரவீந்திரன் வெளியிட்டில்
இரா.சரவணன்
இயக்கத்தில்..
ஜிப்ரான்
இசையில்..
R. V. சரண்
ஒளிப்பதிவில்…
நெல்சன் ஆண்டனி
எடிட்டிங்கில்….
சசிகுமார்,
சுருதி பெரியசாமி,
சமுத்திரகனி,
Master S மாதேஷ்,
V ஞானவேல்,
நிலா சுதாகர்,
G M குமார்,
சக்தி சரவணன்,
சித்தன் மோகன்,
மிதுன் போஸ்,
பாலாஜி சக்திவேல்,
கட்டு எறும்பு ஸ்டாலின்,
மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் நந்தன்
கதை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார் பாலாஜி சக்திவேல். அந்த பஞ்சாயத்து தொகுதி தனி (Reserved) பஞ்சாயத்து தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த ஜாதிய உணர்வு கொண்ட தலைவர் பாலாஜி சகதிவேல் இதை பொறுக்கமுடியாமல் வேறுவழியின்றி தன்னிடம் அடிமை போல வேலை செய்யும் தலித் சமூகத்தை சேர்ந்த குழுவானை என்றழைகப்படும் அம்பேத் குமார் (சசிகுமார்) என்பவரை எந்த போட்டியும் இல்லாமல் தலைவராக்குகிறார் பாலாஜி சக்திவேல். தன் மக்களுக்கு சுடுகாடுக்கு இடம் வேண்டி சசிகுமார் கிராம நிர்வாக அதிகாரியை(சமுத்திரக்கனி) சந்தித்து கிராமத்துக்காக சில விஷயங்களைச் சொல்லி செய்கிறார். இதனால் கோபம் கொள்ளும் முன்னாள் தலைவர் பாலாஜி சக்திவேல் , சசிகுமாரை ஊர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அடித்து, அவமானப்படுத்தி, பதவியை ராஜினாமா செய்ய வைக்கிறார். மீண்டும் வேறொரு தலித் நபரை போட்டியின்றி தலைவராக்க முயற்சி செய்கிறார். இந்த முயற்சி நடந்ததா? சசிக்குமார் என்ன முடிவெடுத்தார்? என்பதே ‘நந்தன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
சசிக்குமார் கதைக்காக தோற்றத்தை மாற்றி சிறப்பாக நடித்துள்ளார். சுருதி பெரியசாமி சசிக்குமார் மனைவியாக சிறப்பாக நடித்துள்ளார். சசிக்குமார் மகனாக நடித்தவரும் நன்றாக நடிந்திருக்கிறார். பாலாஜி சக்திவேல் வில்லனாக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார். மற்றும் இதில் நடித்திருக்கும்
V ஞானவேல்,
நிலா சுதாகர்,
G M குமார்,
சக்தி சரவணன்,
சித்தன் மோகன்,
மிதுன் போஸ்,
கட்டு எறும்பு ஸ்டாலின் என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜிப்ரன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. RV சரணின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
இயக்குநர் Era சரவணன் ரிசர்வ் தொகுதியில் என்ன நடக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.