Aaragan Movie Review

அருண் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா, கலைராணி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஆரகன்
கதை
இளைய இளவரசர் இளந்திரையன் போரில் நாட்டை இழந்து வனப்பகுதியில் தஞ்சம் அடைகிறார். அங்கே கடுந்தவம் செய்யும் மகாமுனிவர் ஒருவரை பாம்பு தீண்ட அவரை காப்பாற்றுகிறார். இதனால் அகமகிழந்த முனிவர் இளந்திரையனை சீடனாக சேர்த்து கொண்டு மந்திரங்கள் மாயங்களை சொல்லிக்கொடுக்கிறார். உயிரை காப்பாற்றிய இளந்திரையனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அந்த இளவரசர் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மகாமுனிவர் இளவரசர் இளந்திரையனுக்கு சக்தி வாய்ந்த யவனகாந்தை வேர் ஒன்றை கொடுத்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளை கூறுவது போல் ஒவிய வரைகலை மூலம் 600 முதல் 700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்துடன் ஆரம்ப காட்சிகள் காட்டப்படுகின்றன.அதன் பின் சென்னையில் கதைக்களம் தொடர்கிறது.
மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா இருவரும் காதலர்கள் திருமணத்திற்கு முன் பணம் சேர்த்து தொழில் தொடங்க திட்டமிடுகின்றனர். அதற்காக கவிப்பிரியா காட்டுப்பகுதியில் வசிக்கும் வயதான பெண்மணிக்கு(ஸ்ரீரஞ்சனி) பணிவிடை செய்யும் வேலை அதிக சம்பளத்தில் கிடைக்கிறது. செய்யும் வேலை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக செய்து கொண்டிருக்கையில் நாளடைவில் பயத்தை தருகிறது அந்த பயத்துக்கான காரணம் என்ன காதலர்கள் வாழ்க்கையில் இணைந்து பணத்தை சம்பாதித்து தொழில் தொடங்கினார்களா? இல்லையா? என்பதும்
வரலாற்று கதைக்கும் இன்றைய காலகட்டத்தின் கதைக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன? எதற்காக கவிபிரியா இந்த மலைப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டார்? வரவழைத்தவர் யார்? கவிபிரியா உயிரோடு திரும்பி சென்றாரா? இல்லையா?
என்பதும் படத்தின் திரைக்கதை
மைக்கேல் தங்கதுரை கதையின் நாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியான கவிப்பிரியா கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். கலைராணி தோற்றத்திலும் நடிப்பிலும் நன்றாக நடித்துள்ளார். ஸ்ரீரஞ்சனியும் கொடுகாகப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். மற்றும் இதில் நடித்திருக்கும் பிரித்தம் சக்ரவர்த்தி, யாசர், ஆதித்யா கோபி, முருகாநந்தம்,மெர்சல் ராஜா, ஊர்த்தி கவூரி என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
விவேக்-ஜெஸ்வந்த் பிண்ணனி இசை படத்திற்கு பலம்.சூர்யாவின் ஒளிப்பதிவு ஏற்காடு மலையை அழகாக படம் பிடித்துள்ளார்.
இயக்குநர் அருண் காதல் கதையை கொஞ்சம் வித்தியாசமாக சொல்ல முயற்ச்சித்திருக்கிறார். பாராட்டுக்கள்.