ராஜேஷ்கண்ணா இயக்கத்தில் வினோத் மோகன் பிந்துமாதவி ஜான்விஜய் ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மாயன்.
கதை
சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ‘டீம் லீட’ராகப் பணிபுரியும் ஆதிக்கு (வினோத் மோகன்) ‘இன்னும் 13 நாள்களில் உலகம் அழியப் போகிறது, அதற்குள் நீ நன்றாக வாழ்ந்துகொள்’ என்று ஒரு மின்னஞ்சல் வருகிறது. அதை முதலில் நம்பாத ஆதி, தன்னைச் சுற்றி நடக்கும் சில நிகழ்வுகளால் அதை நம்புகிறான். அதன் விளைவாக, தனது காதல், திருமணம், சொந்த வீடு ஆகிய கனவு களை அதிரடியாக நிறைவேற்றுகிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆதியின் கதாபாத்திரத்தில் வினோத் மோகன் சிறப்பாக நடித்துள்ளார். சக்ரவர்த்தியாக ஜான் விஜய் கோப்பெருந்தேவியாக வரும் பிந்து மாதவி, வீரசூரனாக வரும் சாய் தீனா உள்ளிட்ட கதாபாத்திரங்களும் மற்றும் இதில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
பின்னணி இசையால் மிரட்டியிருக்கிறார் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்.
அருண் பிரசாந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
புராணம், மாயன் நாள்காட்டி, தற்காலம் மூன்றையும் இணைத்து அதை கதையாக்கி சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார் , இயக்குநர் ஜெ.ராஜேஷ் கண்ணா. பாராட்டுக்கள்.
Prev Post