C V குமார் மற்றும் தங்கராஜ் தயாரிப்பில் S J அர்ஜூன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா, கருணாகரன்’ ராதாரவி, வாகை சந்திரசேகர், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் சூதுகவ்வும் 2.
கதை.
சூதுகவ்வும் முதல் பாகத்தில் எம்.எஸ். பாஸ்கரனின் மகனாக வந்த கருணாகரன் சூதுகவ்வும் 2 பாகத்தில் நிதியமைச்சராகவே ஆகிவிடுகிறார். ஏகப்பட்ட ஊழல் செய்து வரும் அவரை மிர்ச்சி சிவா மற்றும் அவரது கடத்தல் கேங் திட்டம் போட்டு கடத்துகிறது. விஜய் சேதுபதியை போலவே சிவாவும் காமெடி கிட்னாப்பிங் கிங்காக வருகிறார். . மிர்ச்சி சிவா எதற்காக நிதியமைச்சரான கருணாகரனை கடத்துகிறார். கடைசியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக வரும் மிர்ச்சி சிவா மற்றும் அவருடைய கேங்கில் இருக்கும் நபர்கள் செய்யும் நகைச்சுவை, சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் நம் பொறுமையை சோதிக்க வைக்கிறது. கருணாகரன் மட்டும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், வாகை சந்திரசேகர், ராதா ரவி, ஹரிஷா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எட்வின் லூயிஸ் இசை பரவாயில்லை ரகம். கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘சூது கவ்வும் ’மிர்ச்சி சிவா சொன்னது போல், சூது கவ்வும் 1 கல்ட் படம், சூது கவ்வும் 2-ல் கழற்றுவதற்கு எதுவும் இல்லை என்பது போல் தான் இப்படம் இருக்கிறது. திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கலாம். ஒட்டு மொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள்.