விடுதலை 2 திரைவிமர்சனம்
எல்ரெட் குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், சேத்தன், தமிழ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் விடுதலை 2 இசை: இளையராஜா.
கதை.
முதல் பாகத்தின் இறுதியில் கைது செய்யப்படும் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரின் வாக்குமூலங்களும், காவல்துறை ரியாக்சன்களும்தான் ‘விடுதலை. பாகம்-2’ படத்தின் ஒன்லைன். பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் கடைநிலை காவலரான குமரேசனால் கைது செய்யப்படுவதோடு, முதல் பாகம் முடிந்திருந்திருக்கும். இதனால், நடந்த சம்பவங்களை விளக்கி தனது தாய்க்கு எழுதிய கடிதத்தை குமரேசன் படிப்பது போல் தொடங்குகிறது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம்.
கான்ஸ்டபிள் குமரேசன் (சூரி) பெருமாள் வாத்தியாரை (விஜய் சேதுபதி) பிடிக்க உதவிய நிலையில், போலீஸ் அதிகாரியான கெளதம் மேனன் பெருமாள் வாத்தியாரை விசாரிக்கும் இடத்தில் இருந்து படத்தை ஆரம்பிக்காமல் வாத்தியாராக இருந்த பெருமாள் கருப்பனுக்கு (கென் கருணாஸ்) நேரும் கொடுமை காரணமாக தனது பெயரையே கருப்பன் என மாற்றிக் கொண்டு பண்ணையார்த்தனத்துக்கு எதிராக புரட்சி செய்கிறார். தோழராக வரும் ஆடுகளம் கிஷோரின் அரசியல் சித்தாந்தங்களை கற்றுக் கொண்டு தோழராக மாறும் விஜய் சேதுபதி ஆடுகளம் கிஷோரின் கொலைக்குப் பிறகு மக்கள் படையை பயங்கரவாத இயக்கமாக மாற்றுகிறார். அவர் கைது பற்றி செய்தி வெளியான நிலையில், வெளியே நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் போலீஸாரிடம் இருந்து தனது மக்கள் படை மூலம் தப்பிச் செல்லும் பெருமாள் வாத்தியாருக்கு கடைசியாக என்ன ஆகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக மிரட்டிய குமரேசன் என்ன ஆனார்? என்ன செய்தார்? என்பதே விடுதலை 2 படத்தின் மீதிக் கதை.
பெருமாள் வாத்தியாராகவே வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அப்பாவியாக, தோழராக, புரட்சியாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு இணையாக நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் இடையேயான ரொமான்ஸ் ரசிக்க வைக்கிறது. தலைமை செயலராக வரும் ராஜீவ் மேனன் நடிப்பு அருமை. சூரிக்கு பெரிதாக வேலை இல்லை. இருந்தாலும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.சேத்தன் தன் அபார நடிப்பால் மிரட்டியுள்ளார். அவர் நடிக்கிறார் என்பதை மறந்து தியேட்டரில் உள்ளவர்கள் எல்லாம் சேத்தனை திட்ட ஆரம்பித்து விட்டார்கள். கிஷோர், கென் கருணாஸ் ஆகியோர் சிறு கதாபாத்திரத்தில் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள். தமிழ் மற்றும் இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.வேல்ராஜின் ஒளிப்பதிவும் இளையராஜாவின் இசையும் படத்துக்கு பெரும் பலமாக உள்ளது. முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தும் கதை மற்றும் திரைக்கதை இல்லாமல் பல இடங்களில் தொய்வு தென்படுவதை சரி செய்திருக்கலாம்
இயக்குநர் வெற்றிமாறன் சொல்ல வந்த அரசியலை முதல் காட்சியில் இருந்து ஆரம்பித்து படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சூரி செய்யும் சம்பவம் வரை சுவாராஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார். வசனங்களும்அருமை.பாராட்டுக்கள்.
பார்க்க வேண்டிய படம். விடுதலை 2
Prev Post
Next Post