
அருள்நிதியை வைத்து தேஜாவு என்ற வித்தியாசமான திரில்லர் படத்தில் இயக்கியவர் தான் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். அவரது இயக்கத்தில் தருணம் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் ஐயப்பன், பால சரவணன், கீதா கைலாசம், ஸ்ரீஜாரவி,விமல் மற்றும் பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும், அருள் இளங்கோ சித்தார்த் எடிட்டிங்கும் செய்துள்ளனர்.
கதை
சிஆர்பிஎப் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் ஹீரோ கிஷன் தாஸ் ஒரு ஆபரேஷனில் தன்னுடைய சக டீம்மெட்டையே தெரியாமல் சுட்டு விடுகிறார், இதனால் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்படுகிறார். அடுத்து எந்த பிரச்சினையிலும் சிக்காமல் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுரை கூறுகின்றனர். ஹீரோயின் ஸ்ம்ருதி வெங்கட் ஒரு கார் விபத்தில் சிக்குகிறார். கிஷன்தாஸ், ஸ்மிருதி வெங்கட் இவர்கள் இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்திக்கின்றனர். அதன் பிறகு இருவருக்கும் காதல் ஏற்படுகிறது, இந்த காதல் நிச்சயதார்த்தம் வரை செல்கிறது. இந்நிலையில் ஸ்ம்ருதி வெங்கட் நண்பர் ராஜ் ஐயப்பனிக்கு இவர்களது காதல் பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி ஸ்ம்ருதி வெங்கட்டை அடைந்து அதை வீடியோவாக எடுத்து மறுபடியும் மிரட்டி மிரட்டி தன்வசம் வைத்துக்கொள்ள நினைக்கிறார். இந்த சூழ்நிலையில் ராஜ் அய்யப்பனை ஸ்மிருதி வெங்கட் அவரது வீட்டில் கொலை செய்துவிடுகிறார்வீட்டிற்கு வந்த கிஷன்தாஸ்க்குதெரியவர அதன் பிறகு என்ன நடந்தது என்பதே தருணம் படத்தின் கதை.
கிஷன்தாஸ் கதையின் நாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். கதையின் நாயகியாக ஸ்மிருதி வெங்கட் கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். ராஜ் அய்யப்பன் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார். கீதா கைலாசம், பால சரவணன், ஸ்ரீஜா ரவி,விமல் என இதில் நடித்த அனைவருமே அவரவர் கேரக்டர் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். தர்புகா இசையில் பாடல்கள் பரவாயில்லை. அஸ்வின் ஹேமந்த் பிணணனி இசை ரசிக்க வைக்கிறது. ராஜா பட்டாச்சார்ஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம். இயக்குநர் அர்விந்த் ஸ்ரீனிவாசன் சொல்ல வந்த கதையை இன்னும் கொஞ்சம் திரைக்கதையிஸ் சுவாராஸ்யமாகசொல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்.
|
ReplyForward
|