Ags தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதிப் ரங்கநாதன், அனுபமா, மிஷ்கின்,K.S. ரவிக்குமார், கௌதம்மேனன்ஜார்ஜ் மரியம்,VJ சித்து , ஹர்ஷத் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் டிராகன்.
கதை
பிரதீப் 12-வது வகுப்பில் நன்றாக படித்து 96% எடுத்து பள்ளியில் நல்ல பெயர் வாங்குகிறார். பின் தான் காதலித்த பெண்ணிடம் காதலை சொல்கிறார். அந்த பெண்ணோ படிக்காமல் கெத்து காட்டும் பையனை லவ் பண்ணுவதாகசொல்கிறார். பின் கல்லூரியில் படிக்காமல் 48 அரியர் வைத்துக் கொண்டு கெத்தாக டிராகனாக ஓலம் வருகிறார். அவரை அனுபமா கெத்தைகண்டு காதலிக்கிறார். கல்லூரி புரொபசர் மிஷ்கினை எதிர்த்துக் கொண்டு கல்லூரிவிட்டு வெளியே வருகிறார். பிரதீப் அப்பா அம்மாவிடம் வேலைக்கு செல்வதாகவும் மாதாமாதம் 20000 சம்பளம் என்று பொய் சொல்லி நண்பர்கள் தயவில் வாழ்ந்து வருகிறார். தன்னுடன் படித்தவர்கள் எல்லாம் வேலைக்கு போக, இவர் பிக்பாஸ் பார்த்து பொழுது கழிக்கிறார்.இதனால் அனுபமா பிரதீப்பை ப்ரேக் அப் செய்ய, இனி அவளுக்கு முன்பு நன்றாக வாழ வேண்டும் என பிரதிப் பணம் கொடுத்து போலி சான்றிதழ் வாங்கி 120000 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார். வாழ்க்கையில் எல்லாம் செட்டில் ஆகி புதுப்பெண்ணுடன் காதலும் ஏற்பட்டு வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள் மிஷ்கின் பிரதிபை சந்திக்கும் சூழ்நிலை வர போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த விஷயம் தெரிய பிரதீப் மிஷ்கின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.
அப்போது மிஷ்கின் மீண்டும் கல்லூரிக்கு வந்து படித்து 48 அரியரை கிளியர் செய்யவேண்டும் என்று சொல்ல வேறு வழியில்லாமல் பிரதீப் ஒத்துக்கொள்ள பிறகு பிரதீப் 48 அரியரை பாஸ் செய்தாரா? இல்லையா? பிரதிப் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை
கதாநாயகனாக பிரதிப் நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக அனுபமா அழகாலும் நடிப்பாலும் நம்மை கவர்கிறார்.மற்றொரு நாயகியாக நடித்து இருக்கும் கயடு லோஹர், அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். கல்லூரி தலைமை ஆசிரியராக வரும் மிஷ்கின், விபியாக வரும் கௌதம் மேனன்
நடிப்பு படத்திற்கு பலம் விஜே சித்து, ஹர்ஷத் கான் பேட் பேன் ரவி, ஜோ மைக்கல், ks ரவிக்குமார், ஜார்ஜ் மரியம் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கேரக்டர் உணர்ந்து சிறப்பாக நபடித்துள்ளனர். லியோ ஜோன்ஸ் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் அருமை.நிகேத்பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வாழ்க்கையில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் ஒருவனின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை சுவாராஸ்யமாக சொல்லி கல்லாரி இளைஞர்களின் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாகசொல்லி வெற்றிபடமாக கொடுத்திருக்கிறார்.பாராட்டுக் கள்.
Prev Post