இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த தயாரிப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ்

176

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் N.லிங்குசாமி தற்போது பிரபல நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

நேற்று துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை வெற்றி தயாரிப்பாளர் N. சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சுஜித் வாசுதேவ், இசை – DSP,  சண்டைப்பயிற்சி – அன்பறிவ், படத்தொகுப்பு – நவீன் நூலி, வசனம் – Sai Mathav Burra, Brinda Sarathy

பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.