“எண்ணம் போல் வாழ்க்கை”.. என பெயரிடப்பட்ட இந்த தனி இசை ஆல்பம்,

246

“எண்ணம் போல் வாழ்க்கை” தனிப் பாடலுக்கான லோகோ மற்றும் போஸ்டரை நடிகர் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ‘வேம்புலி’ ஜான் கொக்கன் வெளியிட நடிகர் ரியோ ராஜ் பெற்றுக்கொண்டார்.

 

20க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திரங்கள் பாடிய TMJAவின் “எண்ணம் போல் வாழ்க்கை.” என்ற தனி இசை ஆல்பத்தை யுவன் ஷங்கர் ராஜா வெளியிடுகிறார்!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் எண்ணம் போல் வாழ்க்கை.. என்ற தனி இசை பாடல் ஆல்பம் தயாராகி உள்ளது.

இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய யு 1 ரெக்கார்டு நிறுவனம் மூலம் விரைவில் வெளியிட உள்ளார்.

இதற்கான ஒப்பந்தம் இரு தினங்கள் முன் கையெழுத்தானது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் ஆகியோர் இந்த ஒப்பந்த நகலை பெற்றுக் கொண்டார்கள்.

அதோடு, தமிழ் சினிமாவிலும், பத்திரிகை வரலாற்றிலும் முதல் முறையாக பிரபல நட்சத்திரங்களான
சசிகுமார், ஆர்யா, GVபிரகாஷ், சூரி, கிருஷ்ணா, அசோக்செல்வன், மகேந்திரன், யோகிபாபு, மைக்கேல், மஹத், குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், புகழ், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யாராஜேஷ், ஷெரின், ஜனனி, சஞ்சித்ஷெட்டி, ரைசா, சாக்‌ஷி அகர்வால், அதுல்யா, அம்மு அபிராமி என 20க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இதில் பாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி ஸ்டோரி புகழ் எட்வின் லூயிஸ் இசையில், கவிதாவின் வரிகளில், பிரீத்தி குரலில், சாண்டி நடனம் அமைக்க, தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோசப் எடிட் செய்துள்ளார்..

கொரானா கடந்து, தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது.
இந்த தனி இசை ஆல்ப பாடல் வெளியீடு விரைவில் வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.

இந்தப் பாடலுக்கான லோகோ மற்றும் பேனர் வெளியீடு இன்று சிறப்பான முறையில் நடைப்பெற்றது. எண்ணம் போல் வாழ்க்கை பாடலுக்கான லோகோ மற்றும் போஸ்டரை நடிகர் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ‘வேம்புலி’ ஜான் கொக்கன் வெளியிட நடிகர் ரியோ ராஜ் பெற்றுக்கொண்டார்.

ரியோ பேசுகையில்,
ஒரு நல்ல காரணம் கருதி வெளியிடப்படும் இந்த பாடலுக்கான லோகோ வெளியீட்டில் நானும் ஒரு பகுதியாக இணைந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய சங்கங்கள் செயல்படுகின்றன, ஏதோ உதவி வாங்கினோம் அதனால் பலன் அடைந்த பகிர்ந்து கொண்டோம் என்று இல்லாமல் உங்களால் என்ன செய்ய முடியும் என யோசித்து இவ்வளவு பெரிய அடி எடுத்து வைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாடலை நானும் கேட்டேன் மனதுக்கு நிறைவாக இருக்கிறது. TMJA வின் இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் மேலும் ஒரு நல்ல காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை லோகோவை வெளியிடுவதிலும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் மேற்கொண்டு இப்படியான எந்த நல்ல காரியம் என்றாலும் முதல் ஆளாக நான் அங்கே எடுப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி எப்போது கூப்பிட்டாலும் வரவும் தயாராக இருக்கிறேன் என ரியோ தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

நடிகர் ஜான் கொக்கன் பேசுகையில்,

டிஎம்ஜி வில் எண்ணம் போல் வாழ்க்கை இந்தப் பாடலின் லோகோ மற்றும் பேனரை வெளியிடுவதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. குறிப்பாக என்னுடைய வேம்புலி என்னும் கேரக்டர் இன்று மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு பிரபலமாக பேசப்பட்டு இருப்பதற்கு முதல் காரணம் பத்திரிக்கையாளர்கள் மட்டுமே அவர்களுக்கு என்னேரமும் ஏதேனும் ஒரு வகையில் என் கடமையை ஆற்ற காத்திருந்தேன். இப்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது எண்ணம் போல் வாழ்க்கை பாடலை நானும் பார்த்தேன் நிறைய பிரபலமான முகங்கள் பாடல் அற்புதமாக இருக்கிறது பத்திரிக்கையாளர்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடலின் பேனர் மற்றும் லோகோ நான் வெளியிடுவதில் எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தொடர்ந்து என்னால் எதிர்காலத்தில் என்ன உதவி செய்ய முடிந்தாலும் கண்டிப்பாக செய்ய காத்திருக்கிறேன் காரணம் இன்று நான் இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் அது பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவும் உதவியும் தான். என தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.