Take a fresh look at your lifestyle.

டியூட் சினிமா விமர்சனம்

11

 

அகன் (பிரதீப் ரங்கநாதன்) மற்றும் மகள் குறள் (மமிதா பைஜூ), ஆகியோர் ரோகிணி மற்றும் அமைச்சருமான அதியமான் அழகப்பனின் (சரத்குமார்) உடன்பிறந்தவர்களின் குழந்தைகள். பிராங்க் மற்றும் மக்களுக்கு ஆச்சரியங்களையும் குறும்புகளையும் கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனத்தை மாமன் மகள் குறளுடன் சேர்ந்து நடத்துகிறார் அகன். இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள், ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்திருக்கிறார்கள். குறள் அவ்வப்போது அகனைத் தேற்றுவதோடு, தன் காதலை முன்மொழிந்த போது, அகன் அவளுக்கு தெளிவான பதில் கொடுக்காமல் அவளது காதலை நிராகரிக்கிறார்.

அவளிடம் 100 சதவீத நட்பு மட்டுமே இருப்பதாக கூறுகிறார். மேலும் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறான். அகனின் இந்த முடிவால்மனமுடைந்த குறள், ஊருக்குச் செல்கிறார். குறளின் பிரிவால், அவர் மீதான காதலை உணரும் அகன், தான் எதை இழக்கிறோம் என்பதை உணர்ந்ததும், தான் எடுத்த முடிவை வெளிப்படுத்த தனது மாமா அதியமான் அழகப்பனிடம் குறளரசியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறுகிறார். அதியமான் அழகப்பன் அவர்கள் திருமணத்திற்கு மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.

ஆனால், இப்போது அகனின் காதலை குறள் ஏற்க மறுக்கிறார். காரணம் அகனால் நிராகரிக்கப்பட்ட குறள், பாரியுடன் (ஹ்ருது ஹாரூன்) காதல் கொள்ளும் போது விஷயங்கள் தலைகீழாக மாறுகிறது. இருந்தபோதிலும், சூழ்நிலைகள் வேறு விதமாக அமைந்து குறளை – அகன் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.