Shirdi Productions தயாரிப்பில் அஞ்சனா அலிகான் இயக்கத்தில், முகேன் ராவ் -திவ்ய பாரதி நடிக்கும் திரைப்படம் “மதில் மேல் காதல்” !

144

திரைப்படைப்பாளி அஞ்சனா அலிகான், மனதை மயக்கிய “வெப்பம்” படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். ‘வெப்பம்’ படம் அழுத்தமான கதைக்களம், நட்சந்திரங்களின் மிகச்சிறந்த நடிப்பு, சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் ப்ளாக்பஸ்டர் பாடல்களுக்காக பெரியளவில் பாராட்டப்பட்டது. இயக்குநர் அஞ்சனா அலிகான் தற்போது முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கும் ரொமான்ஸ் படமான ‘மதில் மேல் காதல்’ என்ற புதிய படத்துடன், இயக்குநராக மீண்டும் தன் பயனத்தை துவக்கியுள்ளார். Shirdi Productions தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.

‘மதில் மேல் காதல்’ என்கிற தலைப்பே கதையின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இது குறித்து இயக்குநர் அஞ்சனா அலிகானிடம் கேட்டாபோது, ‘மதில் மேல் பூனை’ என்ற சொற்றொடர் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானது, அது சுவற்றில் இருபுறமும் தாவிச் செல்ல வசதியாக அமர்ந்திருக்கும் பூனையை குறிக்கும். படத்தின் கதாநாயகன் அந்த மாதிரியான பூனையின் மன நிலையை கொண்டவன். அவன் தனது மனநிலையை அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடியவன். ஒரு கணத்தில் தனது காதலியைப் பற்றி பைத்தியமான மனநிலையில் இருக்கும் ஒருவன், அடுத்த கணம் காதல் எனும் உணர்வையே முழுமையாக வெறுக்கிறான். அதனால் “மதில் மேல் காதல்” என்ற தலைப்பு இப்படத்திற்கு கச்சிதமாக இருக்கும் என்று உணர்ந்தோம். இது ஒரு வண்ணமயமான மற்றும் இளமை நிறைந்த ஒரு ரோம்-காம், முழுப்படமும் பார்வையாளர்களை மயக்கும்படி இருக்கும். மேலும் இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களை புன்னகை மலர்ந்த முகத்துடன் இருக்க வைக்கும். மதில் மேல் காதல் படத்தின் கதை, பார்த்தவுடன் காதலில் விழும் ஒரு ஜோடி, காதலின் உறவை தக்க வைத்துக்கொள்ள அன்பு மட்டுமே போதாது என்பதை உணர்வதை பற்றியது. இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அமசங்களை சம அளவில் கொண்டிருக்கும் ஒரு அட்டகாசமான ரோம்-காம் திரைப்படம்.

முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதைப் பற்றி இயக்குனர் அஞ்சனா அலிகான் மேலும் கூறுகையில், முகேன் இப்போது கோலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் ஒரு நாயகனாக வலம் வருகிறார். அவர் பெண்களால் மிகவும் விரும்பப்படும் நபர் என்பதால் மட்டுமல்ல. அவர் ஒவ்வொரு வீட்டிலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் பிடித்த நபராக இருக்கிறார். அனைவருக்கும் அவர் மீது ஒரு தனித்துவமான கவர்ச்சி இருக்கிறது. இந்த அனைத்து அம்சங்களும் அவரை ரோம்-காம் படத்திற்கு எளிதாகப் பொருந்தக்கூடியவராக மாற்றிவிட்டது. திவ்ய பாரதியைப் பொறுத்தவரை, அவர் எங்கள் குழுவில் உள்ள அனைவராலும் பரிந்துரைக்கப்பட்டார். அவரின் இயல்பான நடிப்பு, மேலும் அவரது திரைக்கவர்ச்சி எங்கள் படத்திற்கு உயிரூட்டும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றார்.

இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, தீப்ஸ், KPY பாலா, ஆலியா, ஹாட்லீ, வைதேகி, ஸ்ரீநிதி, சிராஜ், ஜெய் சங்கர் செல்வராஜ், வாசு விக்ரம் மற்றும் ராஜி சாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். மதில் மேல் காதல் படத்தை அஞ்சனா அலிகான் எழுதி இயக்குகிறார். Shirdi Productions இப்படத்தை தயாரிக்கிறது. K. சிவசங்கர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), கௌதம் ஜார்ஜ் (ஒளிப்பதிவு), அந்தோணி (எடிட்டர்), நிவாஸ் K பிரசன்னா (இசை), கல்யாண் மாஸ்டர் (நடன அமைப்பு), சுரேஷ் கல்லேரி (கலை), முக்தி சுவாமிநாதன்-சேத்தனா கவுட் (ஸ்டைலிஸ்ட்), ஆரத்தி ஆபிரகாம் ( பப்ளிசிட்டி டிசைன்ஸ்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.