குலு குலு

84

முட்டாள் கடத்தல்க்காரர்களான ஜார்ஜ் மர்யன் மற்றும் அவரது கேங் வில்லன் கடத்தச் சொன்ன பெண்ணை விட்டு விட்டு முதலும் நீ முடிவும் நீ ஓடிடி படத்தில் சைனீஸ் ஆக நடித்து கவனத்தை ஈர்த்த ஹரீஷை கடத்தி விடுகின்றனர். அமேசான் காட்டில் இருந்து தனது இனமே அழிந்த நிலையில், அங்கிருந்து வெளியேறி 13 மொழிகள், பல தொழில்கள் கற்றுத் தேர்ந்த, யார் உதவிக் கேட்டாலும் தர்ம அடி வாங்கினாலும் பரவாயில்லை என நாடோடிகள் சசிகுமார் போல உதவி செய்யும் சந்தானத்திடம் அந்த சைனீஸை கண்டுபிடிக்க உதவி கேட்க, அவர் காப்பாற்றிக் கொடுத்தாரா? இல்லையா? நல்லது செஞ்சாலும், சிக்கல் வரத்தான் செய்யும், ஆனால், அதையும் மீறி நல்லது செய்யணும் என்கிற ஒன்லைன் தான் இந்த குலு குலு (கூகுள்) படத்தின் கதை.

குலு குலு இயக்குனர் ரத்னா குமார் இயக்கத்தில் சந்தானம் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராஜ் நாராயணன் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 
நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் சந்தானம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, மாறன், சாய் தீனா, டி எஸ் ஆர் என பலர் நடித்துள்ளனர்.