56 நாட்களிலேயே நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டதாக ஹேமந்த் மதுகர் தெரிவிக்கிறார்!

198

பெரிதும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு மற்றும் தமிழ் த்ரில்லரான நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், முழு படமும் வாஷிங்டன் சியாட்டில் நகர பின்னணியில் செட் எதுவும் அமைக்கப்படாமல் 56 நாட்களில் படமாக்கப்பட்டதாக இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறியுள்ளார்.

“முழு படமுமே அமெரிக்கா, சியாட்டலின் புறநகரில் உள்ள உண்மையான இடங்களில் எந்த செட்டும் அமைக்கப்படாமல் படமாக்கப்பட்டது மற்றும் படத்தில் காட்டப்பட்டுள்ள சில போலீஸ்காரர்கள் கூட படத்தின் படப்பிடிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான போலீஸ்காரர்கள் தான். மேலும் முழு படத்தையும் ஒரே நேரத்தில் 56 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படமாக்கினோம் என பகிர்ந்து கொண்டார்.
செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் விசாரணையில் சிக்கிக் கொள்கிறாள். போலிஸ் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார்செய்கின்றனர். கடைசிவரை யூகிக்க முடியாத திருப்பங்களுடன், உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும்.
டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், இந்த படம் மைக்கேல் மேட்சனின் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் நிஷப்தம் திரைப்படத்தை (தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரிரில்) ஸ்டிரீம் செய்யலாம்.