காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

133

நாயகன் கௌசிக்ராம் சினிமாவை நேசிப்பவன் அதே போல தன்னுடைய வாழ்க்கையிலும் சினிமாவில் வருவது போல் காதலிக்க வேண்டும் என்று நினைத்து மழையில் காதலை சொல்வது, கேன்டில் லைட் டின்னர், சினிமாவில் பார்ப்பது போன்று காதல் செய்ய வேண்டும் என்று ஒரு லிஸ்ட் தயாரித்து வைத்து தனக்கு பிடித்த பெண்களை காதலிக்கிறான். எந்த காதலும் கைகூடாமல் போகிறது, பிறகு ஹிரோஷினியிடம் காதலை சொல்லி செல்போன் என்னை வாங்கி வருகிறான். மறுநாள் தந்தையின் நண்பர் குடும்பத்துடன் வீட்டிற்கு வர, அவரின் மகள் தொழிலதிபரான அஞ்சலிக்கு கௌசிக்கை பார்த்தவுடன் பிடித்து போக திருமணம் செய்து கொள்ள சொல்கிறாள். முதலில் ஷாக் ஆகும் கௌசிக் பின்னர் சம்மதம் தெரிவிக்க திருமணம் நடக்கிறது. அழகான பெண் மனைவியாக கிடைத்த சந்தோஷத்தில் கௌசிக் சினிமாவில் வருவது போன்று காதலை சினிமாத்தனமாக சொல்கிறான். அஞ்சலி ஒரு நாள் அவனின் டைரியை படிக்கும் போதும் தான் எல்லோரிடமும் இதே போலத்தான் காதலை சொல்லியிருக்கிறான் என்று தெரிந்து கௌசிக்கின் சினிமா காதலை மாற்ற நினைக்கிறாள். இதனால் அஞ்சலிக்கும் கௌசிக்கிற்கும் சண்டை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கிறது. இதற்கிடையே காதலி ஹிரோஷினியை கௌசிக் சந்திக்கிறான். ஹிரோஷினியும் காதலிக்க சொல்லி வற்புறுத்துகிறாள், ஏற்கனவே மனவருத்தத்தில் இருக்கும் கௌசிக் ஹிரோஷினியை காதலித்தாரா? அஞ்சலியும், கௌசிக்கும் மீண்டும் இணைந்தார்களா? என்பதே காலங்களில் அவள் வசந்தம் படத்தின் மீதிக்கதை.

நடிகை-நடிகர்கள்:

கௌசிக்ராம், அஞ்சலி, ஹிரோஷினி, மாத்யூ வர்கீஸ், ஜெயா சுவாமிநாதன், சுவாமிநாதன், ஆர்.ஜெ.விக்னேஷ்காந்த், அனிதா சம்பத், அருண், தருண் பிரபாகர், விஜே.ராஜீவ், சவுந்தர்யா நஞ்சுண்டான், ராஜம்மா, டாக்டர் மணிகண்டன், டாக்டர் பாயல் மணிகண்டன் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு : ஸ்ரீ ஸ்டியோஸ் மற்றும் அறம் எண்டர்டெயின்மெண்ட்
இயக்கம் : ராகவ் மிர்தத்
இசை : ஹரி எஸ்.ஆர்
உடை : ரிமேக்கா மரியா
கலை : எஸ்.கே
நடனம் : சாண்டி
சண்டை : ஹரி தினேஷ்
ஒளிப்பதிவு : கோபி ஜகதீஸ்வரன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்