பனாரஸ் விமர்சனம்

135

நாயகன் சித்தார்த் (ஜையீத் கான்) தன் கல்லூரி நண்பர்களிடம் நாயகி தனியை (சோனல் மான்டீரோ) என் வலையில் விழ வைக்கிறேன் என்று சவால் விடுகிறார், மேலும் தனியை டைம் மிஷன் கதையை சொல்லி நம்ப வைத்து அணுகுகிறார். தனி சித்தார்த்தை நம்ப, அவரால் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கி தன் படிப்பை இழந்து ஊரை விட்டே செல்கிறரர். தன் தவறை உணர்ந்த சித்தார்த், அவளிடம் மன்னிப்பு கேட்க, தனி தங்கியிருக்கும் பனாரஸ்க்கு செல்கிறார். சித்தார்த் தனியிடம் மன்னிப்பு கேட்டாரா? தனி அவனை மன்னித்தாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகை-நடிகர்கள்:

ஜையீத் கான், சோனல் மோன்டோரியோ சுஜய் சாஸ்திரி, அச்யுத் குமார், பரக்கத் அலி மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு : திலகராஜ் பல்லால் & முஸ்ஸாமில் அஹமத் கான்
இயக்கம் : ஜெயதீர்த்தா
இசை : பி. அஜனீஷ் லோக்நாத்
படத்தொகுப்பு : கே. எம். பிரகாஷ்
ஒளிப்பதிவு : அத்வைதா குருமூர்த்தி
மக்கள் தொடர்பு : யுவராஜ்