“ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

120

Labyrinth  Films தயார்ப்பில்,
நடிகர் சந்தானம் நடிப்பில், இயக்குநர் மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏஜென்ட் கண்ணாயிரம்”.

தெலுங்கு திரைப்படமான ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் மிகச்சிறந்த தழுவலாக ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’  உருவாகியுள்ளது.  “கண்ணாயிரம்” படத்தை ஒரு வெற்றிகரமான தொடராக (franchise) முன்னெடுத்து செல்லவும் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இப்படம் நவம்பர் 25 திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

நடிகை ஆதீரா கூறியதாவது..,
இது தான் சந்தானம் சாருடன் நான் நடிக்கும் முதல் படம். இதுவரை நீங்கள் சந்தானம் சாரை பார்த்த கதாபத்திரத்தில் இருந்து வேறுபட்டு இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது.  இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி. இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். ”

நடிகர் மதன்  கூறியதாவது..,
” இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர், சந்தானம் சாருக்கு  நன்றி. நல்ல படத்தை நமது மொழிக்கு ஏற்றார் போல் ரீமேக் செய்வது ஆரோக்கியமான விஷயம். நமது மொழிக்கு ஏற்றார் போல் உருவாக்க, படக்குழு கடின உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபத்திரத்தை கொடுத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது. படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.”

நடிகர் புகழ் பேசியாதாவது..,
சந்தானம் எனக்கு அண்ணன் போல, அவர் என்னுடைய வளர்ச்சியில் பெரிய பங்காற்றியுள்ளார்.  இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு அவருக்கு நன்றி கூறிகொள்கிறேன்.  நானும், சந்தானம் அவர்களும் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான காம்போவாக வருவோம், அது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். ஹீரோயினுக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.

நடிகை ரியா சுமன் பேசியாதாவது..,
இது என்னுடைய மூன்றாவது தமிழ்படம். இந்த படத்தில் டாக்குமென்டரி இயக்குனராக நடித்துள்ளேன்.  வழக்கமான ஹீரோயின் போன்று இல்லாமல் , இந்த படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது, அது தான் இந்த படத்தை நான் ஒத்துகொள்ள காரணம். சினிமாத்துறையில் பல வருட காலம் பயணித்தாலும், இன்னும் புதிதாய் வந்த நடிகர் போல் சந்தானம் உழைப்பை கொடுக்கிறார். அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.  சந்தானம் புகழ் காம்போ சூப்பராக இருக்கும் இந்த படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.

இயக்குனர் மனோஜ் பீதா பேசியாதாவது..,
” இந்த படத்தில் சந்தானம் தன்னை முழுமையாக மாற்றி நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காமெடி செய்யவில்லை. ஒரு சீரியஸான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் அவரும் புகழும் வரும் காட்சிகளில் அவர் வழக்கமான காமெடிகள் செய்யாமல் தன்னை கட்டுபடுத்தி கொண்டு, படத்தின் கதாபத்திரமாக மாறியுள்ளார்.  இது அவருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்.  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தின் கதையோட்டத்தை புரிந்து கொண்டு அதற்கு தங்களது முழு பங்களிப்பையும் கொடுத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது படத்தை  உங்களது கருத்தை கூறுங்கள். நன்றி.

நடிகர் சந்தானம் பேசியாதாவது..,
“ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், அதில் பல மாற்றங்களை இயக்குனர் செய்துள்ளார். தெலுங்கு ஒரிஜினல் படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா- மகன்  கதை இருக்கும். அதை அந்த படத்தில் முழுமையாக பயன்படுத்தவில்லை, அதை இந்த படத்தில் இயக்குனர் எடுத்து வந்து இருக்கிறார். அதனால் இந்த படம் புதுவிதமாக இருக்கும். என்னை கொஞ்சம் கூட காமெடி செய்ய விடவில்லை. அதுபோக இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்றுகொண்டேன், படத்தில் சில ஆக்சன் காட்சிகளை இயக்குனர் வைத்துள்ளார், அது அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.  ரியா சுமன், புகழ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர், அவர்கள் அனைவரும் ஒரு புதுவிதமான கதாபத்திரமாக தோன்றுவார்கள். யுவன் சங்கர் ராஜா உடைய இசை இந்த படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் உடைய உழைப்புக்கு நன்றி கூறி ஆக வேண்டும், அவர்கள் தான் படத்தை மேம்படுத்தியுள்ளனர். படத்தை பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.”

எடிட்டர் அஜய் பேசியாதாவது..,
இந்த படம் ரீமேக் படம் மாதிரி இருக்காது. இந்த படத்தில் கடின உழைப்பை கொடுத்து ஒரு வித்தியாசமான படத்தை கொடுக்க முயற்சித்துள்ளோம்.  இந்த படத்தில் ஒரு புது சந்தானத்தை நீங்கள் பார்க்கலாம். வழக்கமாக சிரிக்க வைக்கும் சந்தானம், இந்த படத்தில் பல காட்சிகளில் அழ வைப்பார். இந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் சந்தானம் கதாநாயகனாகவும், ரியா சுமன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, E ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆதிரா ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார்கள், அஜய் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ராஜேஷ் (கலை), பிரசன்னா JK (நிர்வாகத் தயாரிப்பாளர்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்ஸ்), பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு), மணி வர்மா K (புரடக்சன் கண்ட்ரோலர்), கணேசன் D (தயாரிப்பு நிர்வாகி), வேணு (ஒப்பனை), வாசு (காஸ்ட்யூமர்), ராஜு (ஸ்டில்ஸ்), பிரதூல் NT (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), T உதய் குமார் (ஒலி கலவை), Sync Cinema (ஒலி வடிவமைப்பு), நாக் ஸ்டுடியோ (DI), பிரசாத் சோமசேகர் (கலரிஸ்ட்), மற்றும் சரவணன் (VFX) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றுகின்றனர்.

மனோஜ் பீதா இப்படத்தை இயக்கியுள்ளார் மேலும் ரமேஷ் மரபு உடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதை எழுதியுள்ளார் Labyrinth  Films இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் உலகமெங்கும் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.