Take a fresh look at your lifestyle.

“மாமன்னன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

176

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

 

அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது

 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே நிறைவு பெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வினை கேக் வெட்டி கொண்டாடினர்.