“கமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் நடிகர் ஷர்வானந்த்

257

இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.

கமனம் படத்தில் பாடகி ‘ஷைலாபுத்ரி தேவி’ என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை நித்யா மேனனின் முதல் பார்வை போஸ்டரை இன்று வெளியிட்டார் நடிகர் ஷர்வானந்த். தெய்வீகம் எங்கும் நிறைந்திருக்க, அழகான புன்னகையுடன் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நடிகை நித்யா மேனன் அந்த போஸ்டரில் தோற்றமளிக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு கமனம் படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலருடைய வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் நடிகை நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருப்பது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார்.

ஞான சேகர் V.S இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்குழு:

கதை-திரைக்கதை-இயக்கம்: சுஜனா ராவ்
தயாரிப்பாளர்கள்: ரமேஷ் கருதூரி, வெங்கி புஷதபு, ஞான சேகர் V.S
இசை: இசைஞானி இளையராஜா
DOP: ஞான சேகர் V.S
வசனம்: சாய் மாதவ் புர்ரா
படத்தொகுப்பு: ராமகிருஷ்ணா அராம்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)