மாபெரும் வெற்றி பெற்ற ‘மாமன்னன்’! – இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த உதயநிதி

81

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

மிகப்பெரிய ஓபனிங்கோடு வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தி வருகிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜுக்கு, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வில், உதயநிதியுடன் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் இருந்தனர்.