டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது ‘குட் நைட்’ திரைப்படம்!

48

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டு ஜூலை 3 முதல் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில், அருமையான நகைச்சுவை டிராமாவான ’குட் நைட்’ திரைப்படத்தை வழங்குகிறது.

இப்படத்தில் மணிகண்டன் மற்றும் மீதா ரகுநாத் தவிர, ரமேஷ் திலக், பக்ஸ் மற்றும் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

குறட்டை சத்தமும் அது சமூகத்தில் உண்டாக்கும் அதிர்வுகளையும் அதன் மீதான கருத்துக்களையும் அலசுகிறது இந்தப்படம். ஒருவனின் வாழ்க்கையையும் அதனால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், நகைச்சுவையுடன் அருமையான திரைக்கதையில் தந்துள்ளது இப்படம்.

குறட்டை விடுவதால், அவதிப்படும் மணிகண்டனுக்கும் அவனின் மனைவியாக நடித்துள்ள மீதாவிற்க்கும் உள்ள உறவையும், குறட்டை அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் நகைச்சுவையுடன் அருமையான திரைக்கதையில் தந்துள்ளது இப்படம்.

மோகனின் குறட்டை சத்தம் அனுவை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்கிறது. இறுதியில், தூக்கமின்மையால் அனுவின் உடல்நிலையைப் பாதிக்கப்படுகிறது, அதனால் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். மனைவியின் உடல்நிலையில் அக்கறை கொண்டு மோகன் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

யதார்த்தமான வாழ்வியலை, நகைச்சுவை பொங்க, அருமையான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

நசரத் பாசிலியன், மகேஷ் ராஜ் பாசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டனின் அட்டகாசமான இசையும், ஜெயந்த் சேது மாதவனின் கண்கவர் ஒளிப்பதிவும் பலமாக அமைந்துள்ளன.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.