பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

87

அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று சங்கராந்தி தினத்தில் வெளியாகிறது பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம்ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாரான ‘ஹனு-மேன்’

கற்பனை திறன் மிகு படைப்பாளியான பிரசாந்த் வர்மாவின் திரை உலகத்தில் உருவாகி வரும் ‘ஹனு-மேன்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று பான் இந்திய படமாக வெளியாகிறது.

படத்தின் தரத்தை உயர்த்தும் அளவிற்கான கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால்.. தாமதம் ஏற்படுகிறது. தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வி எஃப் எக்ஸ் வேலைகளில் திறமையான தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். படத்தின் தரத்திற்கு எந்த சமரசமும் செய்யாமல் தயாரிப்பாளர்கள் படைப்பை நேர்த்தியாக செதுக்கி வருகிறார்கள்.

அதிக பொருட்செலவில் தயாராகும் திரைப்படங்களுக்கு திரையரங்க வெளியீடு என்பது பொருத்தமான வெளியீட்டு தேதி அவசியமாகிறது. இதனால் அனைவரும் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையான சங்கராந்தி மற்றும் அதிக திரையரங்குகள் தேவைப்படுகிறது. தயாரிப்பாளர்களுக்கும் படத்தின் இறுதி கட்ட பணிகளை நிறைவடைய போதுமான நேரத்தை கேட்டுப் பெறுகிறார்கள்.

மேலும் ‘ஹனு-மேன்’ திரைப்படம் , பான் இந்தியா அளவில் விளம்பரப்படுத்தவும், வெளியீட்டு தேதியுடனான பிரத்யேக போஸ்டரில் கதாநாயகன் தேஜா சஜ்ஜா தனது கையில் அனுமன் கொடியுடன் ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு குதிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது அனுமனின் ஆசீர்வதித்துடன்.. அவரின் வல்லமையை வெளிப்படுத்துகிறது.

மிகச் சிறந்த விசுவல் எபெஃக்ட்ஸ் கொண்ட டீசருக்கு நாடு முழுதும் அமோக வரவேற்பு கிடைத்தது. கலை படைப்புகளுடன் கூடிய ‘ஹனுமான் சாலிசா’விற்கும் நல்ல ஆதரவும் கிடைத்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் ஆகிய பல மொழிகளில் ‘ஹனு-மேன்’ பான் -வேர்ல்ட் படமாக வெளியாகும்.

‘ஹனு-மேன்’ அடிப்படையில் அஞ்சனாத்திரி என்ற கற்பனை இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது கதாநாயகன் அனுமனின் சக்திகளை பெற்று அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் உள்ளடக்கம் உலகளாவியதாக இருப்பதால் உலகம் முழுதும் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

இந்தத் திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சௌரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இதனை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.