சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ஆடம்பர ஷாப்பிங் திருவிழா: பிரபல நடிகை ஈஷா தியோல் துவக்கி வைக்கிறார்

454

• பல்லேடியம் அரங்கில் சலுகை திட்டங்களை வெளியிடுகிறார்

சென்னை, ஜூலை 5,2023: சென்னையில் உள்ள பிரீமியம் மால்களில் ஒன்றான பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் வரும் 8–ந்தேதி சனிக்கிழமை ஆடம்பர ஷாப்பிங் திருவிழா -2023 நடைபெற உள்ளது. இந்த ஷாப்பிங் திருவிழாவை இந்த மாலின் பல்லேடியம் அரங்கில் புகழ்பெற்ற பாலிவுட் நடிகை ஈஷா தியோல் துவக்கி வைத்து பல்வேறு பொருட்களுக்கான சலுகை திட்டங்களை வெளியிடுகிறார்.

நடிகை ஈஷா தியோல் பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகை ஹேமா மாலினியின் மகள் ஆவார். இவர் தமிழில் ஆயுத எழுத்து மற்றும் இந்தியில் யுவா, தூம், கால் மற்றும் நோ என்ட்ரி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ரோடீஸ் என்னும் பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவின் நடுவர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த அவர் சிறிது இடைவெளிக்கு பிறகு பங்கேற்றுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுவாகும்.

இந்த நிலையில் வரும் 7–ந்தேதி முதல் 23–ந்தேதி வரை பீனிக்ஸ்சிட்டியில் நடைபெறும் ஷாப்பிங் திருவிழாவை அவர் துவக்கி வைக்க உள்ளார். இதில் கனாலி, கோச், மைக்கேல் கோர்ஸ், கேட் ஸ்பேட், பாஸ், டூன், சூப்பர்டிரி, அர்மானி எக்ஸ்சேஞ்ச், டுமி, டீசல், ஹேம்லீஸ், மதர்கேர், ப்ரூக்ஸ் பிரதர்ஸ், கேஸ், ஹன்கேமோலர் உள்ளிட்ட அனைத்து ரிலையன்ஸ் பிராண்ட்களும் சலுகை விலையில் பொருட்கள், ஆடைகளை விற்பனை செய்ய உள்ளன. இந்த ஷாப்பிங் திருவிழாவை துவக்கி வைத்து இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் ஈஷா தியோல் கலந்துரையாட உள்ளார்.

உங்களுக்கு பிடித்த ஆடம்பர பிராண்டுகளை சலுகை விலையில் வாங்க வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கு செல்லுங்கள். ஷாப்பிங் திருவிழாவில் கலந்து கொண்டு ஏராளமான பொருட்களை சலுகை விலையில் வாங்கி மகிழுங்கள்.