‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் நடித்திருக்கும் தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

85

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைவுகதை படைப்பான ப்ராஜெக்ட் கே எனும் திரைப்படத்திலிருந்து, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகை தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்த திரைப்படம் பொருத்தமான காரணங்களுக்காக பெரும் சலசலப்பை உருவாக்கி, இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட இந்திய படமாக இந்த திரைப்படம் மாற்றம் பெற்றிருக்கிறது.

சான் டியாகோ காமிக்-கானில் உள்ள ஐகானிக் ஹெச் ஹாலில் பிரம்மாண்டமாக அறிமுகமாகவிருக்கிறது ‘ப்ராஜெக்ட் கே’. அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பன்மொழி திரைப்படம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற வாக்குறுதியால் பெரும் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

ப்ராஜெக்ட் கே படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக்கில் தீபிகா படுகோனின் தோற்றம், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செஃபியா டோன் எனும் காட்சிப் பின்னணியில் அவர் ஒரு தீவிரமான ஒளியை வெளிப்படுத்துகிறார். அவரது இந்த தோற்றம், கதையில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதில் ஆர்வமாக உள்ளது போல் இருப்பதால்.. பார்வையாளர்கள் ஆர்வத்துடன் இதனை பார்வையிடுகிறார்கள்.

இயக்குநர் நாக் அஸ்வின் அறிவியல் புனைவு கதைக்கான நாடகத்தை எதிர்கொள்ளும் ஒரு உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்வதற்காக ‘ப்ராஜெக்ட் கே:வை சிறப்பாக வடிவமைத்துள்ளார். அதன் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டாளம்…வியப்பில் ஆழ்த்தக்கூடிய காட்சிகள்… அனைத்து தரப்பு ரசிகர்களுக்கான திரைக்கதை… ஆகியவற்றுடன் இந்த திரைப்படம் தயாராவதால்… வரும் ஆண்டுகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாக இந்த திரைப்படம் மாறியுள்ளது.

2024 ஜனவரி 12-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தவும், அறிவியல் புனைவு கதை ஜானரை மறு வரையறை செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இதன் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வமான முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களுக்காக காத்திருக்கும் வசீகரமான சினிமா பிரபஞ்சத்தை பற்றிய ஒரு அற்புதமான பார்வையாக தீபிகா படுகோனின் ஃபர்ஸ்ட் லுக் அமைந்திருக்கிறது.