சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ‘விவாகம்’ பிரத்யேக திருமண ஆடைகள் கண்காட்சி: நடிகர் பரத், நடிகை வாணி போஜன் பங்கேற்பு

102

கண்காட்சியை பார்வையிட்ட பரத்வாணி போஜனுடன்ரசிகர்கள்பார்வையாளர்கள் கலந்துரையாடல்

சென்னைஜூலை 24,2023: சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ‘விவாகம்’ என்ற பெயரில் பிரத்யேக திருமண ஆடைகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் திருமணத்திற்கான அனைத்து ஆடைகளும் இடம் பெற்றிருந்தன. இந்த ஆடைகள் கண்காட்சியை நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.ஞாயிற்றுக்கிழமை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் சென்ட்ரல் ஏட்ரியத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் மணமகன் மற்றும் மணமகளுக்கென ஏராளமான டிசைன்களில் பிரத்யேக ஆடைகள் இடம் பெற்றிருந்தன.

நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன் ஆகியோர் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டு, பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டிக்கு வந்த பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்ச்சியில் பேஷன் துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் திருமணம் குறித்து தங்களின் பல்வேறு அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டனர்.இந்த கண்காட்சியில், மான்யவர் மற்றும் மோஹே, கலானிகேதன், இந்தியா, பிளாக்பெர்ரிஸ், ஸ்வா டயமண்ட், மெல்லே, கிவா, கிரையோலன் மற்றும் ஆஸ்ட்ரியா உள்ளிட்ட 10 பிராண்ட்களின் ஏராளமான டிசைன்களில் விதவிதமான ஆடைகள் இடம் பெற்றிருந்தன.

இந்த கண்காட்சி குறித்து நடிகர் பரத் கூறுகையில்ண்களுக்கான திருமண ஆடைகளைப் பொறுத்தவரை வரையறுக்கப்பட்ட வகையில் குறைந்த டிசைன்களே உள்ளன என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் அதை தகர்க்கும் வகையில் இந்த விவாகம் கண்காட்சியில் மணமகன்களுக்கென்று ஏராளமான டிசைன்களில் விதவிதமான ஆடைகள் இருப்பதை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

இது குறித்து வாணிபோஜன் கூறுகையில், இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விதவிதமான ஆடைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியதோடு, இதில் இடம் பெற்றுள்ள புடவைகள், லெஹெங்காக்கள் மற்றும் பிற திருமண ஆடைகளின் சுவாரஸ்யமான மற்றும் அற்புதமான வடிவமைப்பு என்னை பிரமிக்க வைத்தது என்று கூறினார்.

திருமண ஆடைகளுக்கான சிறந்த உணர்வை வெளிக்கொணரும் வகையில் ஸ்டைலான மற்றும் பாரம்பரிய ஆடை ரகங்களுடன் சமீபத்திய காலத்திற்கேற்ற நவநாகரீக ஆடைகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.  இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட டிசைனர் திருமண ஆடை சேகரிப்புகளை பார்க்கவும், சென்ட்ரல் ஏட்ரியத்தில் நடந்த அற்புதமான பேஷன் ஷோவை பார்க்கவும் ஏராளமான பார்வையாளர்கள் குவிந்தனர்.