பார்க்கிங் திரைப்பட விமர்சனம். இது ஒரு குடும்ப நாடகம். இந்தப் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ளார், சுதன் சுந்தரம் மற்றும் கே எஸ் ஸ்ரீனிஷ் திரைப்பட தயாரிப்பாளர்கள்,OTT யில் தயாராக உள்ள படங்களை பெரிய திரையில் வழங்குவதில் புத்திசாலிகள், பார்க்கிங் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான், இந்தத் திரைப்படத்தின் பெயரே அந்த கதையை முழுவதாக சொல்லிவிடுகிறது, இந்தத் திரைப்படத்தில் சில காட்சிகள் எதிர்பார்ப்பை தூண்டி விடுகின்றன, இந்த கதையின் ஓட்டம் யுகிக்க கூடியதாக உள்ளது, கதாபாத்திரங்களின் நடிப்பு நல்ல திரைக்கதைக்கு சிறந்த முறையில் உதவுகிறது, மொத்தத்தில் இந்த திரைப்படம் பார்க்கக்கூடிய படமாக ஒத்துக் கொள்ளலாம், இந்தத் திரைப்படம் OTT யில் சிறந்த பார்வையாளர்களை பெறும் என்பது உறுதி, ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார், எம் எஸ் பாஸ்கரின் நடிப்பு சூப்பர் அவர் ஒரு அனுபவசாலி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார், இந்துஜாவின் கதாபாத்திரம் கம்மியாக உள்ளது போல் தோன்றுகிறது, ஒளிப்பதிவு பிரமாதமாக உள்ளது, Sam CS பின்னணி இசை ஓகே, வசனங்கள் நேர்த்தியாக உள்ளது எடிட்டிங் ஓகே, ஒரு அறிமுக இயக்குனரின் இந்த திரைப்படம் பாராட்டுக்குரியது, பார்க்கிங் ஒரு நல்ல முயற்சி.
3/5
Henrry G