MERRY CHRISTMAS MOVIE REVIEW | மெர்ரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

75

மெர்ரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லாத பெண், மர்மான கடந்த காலம் கொண்ட ஒரு ஆணின் கதாபாத்திரத்தை மெதுவாக விவரித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.

துபாயில் இருந்து மும்பைக்கு வரும் என்ஜினியரான ஆல்பர்ட்(விஜய் சேதுபதி) தன் வாய் பேச முடியாத மகளுடன் இருக்கும் மரியாவை பார்க்கிறார். கணவனுடன் பிரச்சனையாக இருக்கும் நேரத்தில் அவரை பழிவாங்க ஆல்பர்ட்டுடன் நேரம் செலவிட விரும்புகிறார் மரியா.

மகளை வீட்டில் தூங்க வைத்துவிட்டு ஆல்பர்ட்டுடன் வெளியே செல்கிறார். திரும்பி வந்தபோது தன் கணவர் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் மரியா.

உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க முடிவு செய்கிறார். ஆனால் ஆல்பர்ட்டோ தான் கிளம்ப வேண்டும் என அவசரப்படுகிறார். நான் ஒரு என்ஜினியர் இல்லை என்கிற உண்மையை சொல்கிறார் ஆல்பர்ட்.

மரியா கணவரின் கொலை குறித்து போலீசார் விசாரணை செய்கிறார்கள். மரியாவின் கணவர் ஏன் கொலை செய்யப்பட்டார், யார் கொன்றார்கள், துபாயில் இருந்து வந்த ஆல்பர்ட் யார் என்பதை சுவாரஸ்யமாக திரையில் காட்டியிருக்கிறார் ஸ்ரீராம் ராகவன்.

விஜய் சேதுபதியும், கத்ரீனா கைஃபும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் இல்லை இல்லை ஆல்பர்ட் மற்றும் மரியாவாகவே வாழ்ந்திருக்கிறார்கள். சண்முகராஜனின் நடிப்பை யாரும் மிஸ் பண்ண முடியாதபடி நடித்திருக்கிறார்.

ஸ்ரீராம் ராகவன் படங்கள் என்றால் ஆங்காங்கே ஃபிளாஷ்பேக் காட்சிகள், இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் காட்சிகள் இல்லாமல் இருக்காது. மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் அத்தகைய காட்சிகள் இருக்கிறது.

அனைவரும் பார்க்க வேண்டிய தரமான படம்

ஹென்றி G