நந்தன் திரைப்பட விமர்சனம்

41

நந்தன் இந்த திரைப்படத்தை இரா சரவணன் தயாரித்து இயக்கியிருக்கிறார், இந்தத் திரைப்படத்தில் சசிகுமார் ஹீரோவாகவும் சுருதி பெரியசாமி, மாதேஷ் மிதுன், பாலாஜி சக்திவேல், கட்டெறும்பு, சமுத்திரக்கனி, பி குணவேலு, ஜி எம் குமார், என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஜாதியும் பேசும் படமாக இந்த படத்தை இரா சரவணன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் போது ஒரு ஊடகத்தை சேர்ந்த ரிப்போர்ட்டர் என்னிடம் கூறியது இந்த படத்தில் ஜாதி கொடுமையை மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார்கள் இந்த காலத்தில் இது போல் நடப்பதில்லை என்று சொன்னார், அதற்குத்தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஈரா சரவணன் முதலிலேயே நம்பிக்கை இல்லாதவர்களை நான் கைபிடித்து அழைத்துச் சென்று நேரடியாக காட்டுகிறேன் என்று டைட்டிலில் சொல்லி விட்டார், இன்னும் நடக்கிறது இந்த கொடுமை. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் தங்கள் தங்கள் கதாபாத்திரத்தை அருமையாக செய்துள்ளனர். குறிப்பாக சசிகுமார் வாழ்ந்திருக்கிறார், ஜிப்ரானிசை படத்திற்கு மெருகேற்றி உள்ளது, கேமராமேன் ஆர்வி சரண் அம்சமாகவும் அழகாகவும் இந்த படத்தை பதிந்திருக்கிறார், விறுவிறுப்பு குறையாமல் தன்னுடைய எடிட்டிங் திறமையால் வேகத்தை கூட்டி இருக்கிறார் நெல்சன் ஆண்டனி, இந்த படத்தை வெளியிட்ட பிரைடல் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துக்கள், இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தன்னுடைய உண்மை அனுபவப் பதிவை பதிந்து இருக்கிறார் இயக்குனர் ஈரா சரவணன் ,அனைத்து நடிகர் நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படத்தை பார்க்கும் மக்களாகிய நாமும் சாதியத்தை ஒழிக்க போராடுவோம் இதுவே இந்த படம் நமக்கு கற்பிக்கிறது, இந்தத் திரைப்படம் பாராட்டுக்குரியது.

 

நன்றி இப்படிக்கு

ஹென்றி G

3/5