Take a fresh look at your lifestyle.

சத்யமூர்த்தி ஜெயகுரு கதையின் நாயகனாக நடித்து, சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ள படம் “ஆன்மீக அழைப்பு”!

134

CHENNAI:

இறந்து போன ஒரு பெண் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் திகில் கதையில்  சத்யமூர்த்தி ஜெயகுரு கதையின் நாயகனாக நடித்து, சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ள படம் “ஆன்மீக அழைப்பு”!
மறுஜென்மம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், உண்மை கதையையும் உள்ளடக்கிய திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் சத்யமூர்த்தி ஜெயகுரு. திகில், மர்மம், அரசியல், ஆன்மீகம், பூர்வஜென்மம், காதல் என படு ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ளது ‘ஆன்மீக அழைப்பு’.
சத்யமூர்த்தி ஜெயகுரு, சுபிக்ஷா, ஆதேஷ் பாலா, சிக்கல் ராஜேஷ், கோபிநாத், சதீஷ் வாரியார், புதுமுகம் மீனா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.ராஜன் பாடல் எழுதியுள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.  செப்டம்பர் 15’ம் தேதி திரைக்கு வருகிறது ‘ஆன்மீக அழைப்பு’!