Take a fresh look at your lifestyle.

வர்ணிகா விஷுவல்ஸ் நிறுவனம் போயபதிராபோவின் ‘ஸ்கந்தா’ படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது!

116

CHENNAI:

மாஸ் கமர்ஷியல் இயக்குநர் போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் திரைப்படமான ‘ஸ்கந்தா’ வர்த்தக வட்டாரம் மற்றும் பார்வையாளர்கள் என  இரண்டின் மத்தியிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

‘அகண்டா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு போயபதி இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் ‘ஸ்கந்தா’. சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இயக்குநர் போயபதி இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தில் குடும்ப பொழுதுபோக்கையும் சேர்த்து அனைத்து பிரிவு பார்வையாளர்களையும் கவர உள்ளார்.

‘ஸ்கந்தா’ திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது மற்றும் அமெரிக்காவில் 27 ஆம் தேதி திரையிடப்படுகிறது. பிரீமியர் காட்சிகள் செப்டம்பர் 27 ஆம் தேதி 5:30 PST, 7:30 CST மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் யுஎஸ்ஏ உரிமையை வர்ணிகா விஷுவல்ஸ் வெங்கட் கைப்பற்றியுள்ளார். பார்வையாளர்களுக்கு ஏற்ற டிக்கெட் விலையில் ‘ஸ்கந்தா’ அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து மிக முக்கியமான படைப்பாக ‘ஸ்கந்தா’ வருகிறது. லேட்டஸ்ட் யூத் சென்சேஷன் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு துள்ளலான இசையை தமன் கொடுத்துள்ளார். சாயீ மஞ்ச்ரேக்கர் மற்றொரு கதாநாயகி மற்றும் உயர் தொழில்நுட்ப மதிப்புகளுடன் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் பல பெரிய நடிகர்களும் நடித்துள்ளனர்.

இந்த மாஸ் என்டர்டெய்னர் படத்தை தியேட்டர்களில் ரசிக்க தெலுங்கு பார்வையாளர்களை வர்ணிகா விஷுவல்ஸ் வரவேற்கிறது.