குட் நைட் எனும் வெற்றி படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்து பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் , ஸ்ரீகௌரி பிரியா, கண்ணா ரவி சரவணன், கீதாகைலாசம் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் லவ்வர் இசை ஷான் ரோல்டன்
கதை
வழக்கமான காதல் ஜோடிகளுக்குள் ஏற்படும் சண்டை அதனால் ஏற்படும் லவ் பிரேக்கப் என்பதை சோல்லும் படம் லவ்வர்.
ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் திவ்யா(ஸ்ரீகௌரி ப்ரியா) கடற்கரையோரம் அமர்ந்து தான் அருணை( மணிகண்டன்) முதன் முதலில் சந்தித்தது பின் காதலித்தது குறித்து சகாக்களிடம் கூறுவதுடன் சுவாராஸ்யமாக லவ்வர் படம் துவங்குகிறது.
நண்பர்களிடம் திவ்யா பேசிக் கொண்டிருக்கும்போதே காதலன் அருணிடமிருந்து போன் அழைப்பு வருகிறது. காதலன் அருண் தான் அழைக்கிறார். ஆனால் செல்போனில் அருணின் பெயரை பார்த்ததும் திவ்யா முகத்தில் இருந்த ஸ்மைல் காணாமல் போய் போனை கட் பண்ணி விடுகிறார். காதலன் போனை ஏன் கட் பண்ணுகிறார். அவர்களுக்குள் என்ன பிரச்சினை? உருகி உருகி காதலித்து லிவ்விங் டுகதெராக வாழ்ந்தவர்கள் வாழ்க்கையில் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை
மணிகண்டன் திரையில் தோன்றும் போதெல்லாம் ஒரு ஹீரோ வரும் ஃபீலே கொடுக்காமல் வந்துட்டான்டா அந்த பொண்ணை டார்ச்சர் பண்ண என நினைக்க வைக்கும் அளவுக்கு மணிகண்டன் சிறப்பாக நடித்துள்ளார். கொடுக்கப்பட்டகேரக்டரை உள்வாங்கி நன்றாக நடித்துள்ளார் மணிகண்டன்.
கதாநாயகியாக மாடர்ன் லவ்-வில் நடித்த ஸ்ரீகெளரி பிரியா நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராக வே வாழ்ந்திருக்கிறார். சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். மணிகண்டன் அப்பாக சரவணன் அம்மாக கீதா கைலாசம் சிறப்பாக நடித்துள்ளனர். கண்ணா ரவி கதாபாத்திரம் அருமை. இதில் நண்பர்கள் கேரக்டரில் நடித்தவர்கள் மட்டுமல்லாது இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா மூலம் படம் பார்க்க பிரமிப்பாக உள்ளது. ஷான் ரோல்டனின் பாடல்களும் பிண்ணனி இசையும் இசையும் படத்திற்கு பெரிய பலம்.
படத்தின் முதல் பாதி சுவாராஸ்யமாக சொன்ன இயக்குநர் இரண்டாம் பாதியும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம்.
ஒரு இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட படமாக குறிப்பாக இன்றைய காதலர்களின் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பிரச்னைகள், சிக்கல்கள் பற்றிப்பேசும் ஒரு ரொமான்டிக் படமாக கொடுத்துள்ள இயக்குநர் பிரபு ராம் வியாஸ்க்கு பாராட்டுக்கள்.