கள்வன் திரைவிமர்சனம்
டில்லிபாபு தயாரிப்பில் P V சங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், தீனா, பாரதிராஜா மற்றும் பலர் நடித்து ஏப்ரல் 4 ல் வெளியாகும் படம் கள்வன்.
GV பிரகாஷும் தீனாவும் முதியோர் இல்லத்துல இருந்த பாரதிராஜவ தத்தெடுத்து ஊருக்கு பஸ்ல கூட்டிக்கொண்டு போறாங்க இவங்க ரெண்டு பேரும் யாரு? பாரதிராஜாவ ஏன் தத்தெடுத்து கூட்டிட்டுபோறாங்க? என்று பஸ்ல உள்ள ஒருவரிடம் பிளாஷ்பேக் கதையை தீனா சொல்கிறார். ஜிவி பிராகாஷும் தினாவும் ஊரில் திருட்டு தொழில் செய்து பொழப்பு நடத்துறாங்க. அவங்க ஊர்ல அப்பப்ப யானை ஊருக்குள் வந்து யாரையாவது ஒருத்தரை மிதிச்சி சாகடிச்சிட்டு போய்விடும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் பக்கத்து ஊரில் மயான கொள்ளை திருவிழா நடப்பதையறிந்துஅந்த ஊருக்கு இருவரும் திருட போறாங்க. கதாநாயகி இவானா வீட்டில் திருடும்போது இருவரையும் போலீஸ்ல பிடிச்சு கொடுக்குறாங்க. இவர்கள்மீது கேஸ் போட்டால் இவர்களால் பிரச்சினை வரும் என்று கருதி பணமும் நகையும் வாங்கிகொண்டுஇருவரையும் விட்டுவிட சொல்கிறார் இவானா அப்பா. திருடனான ஜீவி பிரகாஷ் இவனா மீது காதல் கொண்டு அவர் படிக்கும் பள்ளி வாசலிலே நிற்கிறார். இதையறிந்த இவானா திருடனான உன்னை காதலிக்க மாட்டேன் என சொல்கிறார். இப்படி செல்லும் கதையில் முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜவ தத்தெடுத்தால் இவானா தன் நண்பன் ஜிவி பிரகாஷை காதலிப்பாள் என பிளாஷ்பேக் கதையை தீனா சொல்லி முடிக்கிறார். ஜிவி பிரகாஷ் தினாவிடம் இவானாவுடன் வாழ பணம் வேண்டும் அதற்கு பாராதிராஜவை நம்ம ஊருக்கு அழைத்து சென்று நம்ம ஊர் யானையால் இவரை சாகடிக்க செய்து விட்டால் அரசாங்கம் மூலம் 4 லட்சம் கிடைக்கும் என்று சொல்ல தினா சந்தோஷம் கொள்கிறார். ஜிவி பிரகாஷ் தீனா இருவரும் போட்ட திட்டத்தால் யானை மிதித்து பாரதிராஜா இறந்து இவர்களுக்கு 4 லட்சம் கிடைத்ததா? பாரதிராஜாமீதுபாசம் கொண்ட இவானாவுக்கு இவர்கள் போட்ட திட்டம் தெரிந்து காதலித்த ஜிவி பிரகாஷை கழட்டிவிட்டாரா?இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜிவி பிரகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். நண்பனாக தீனா சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா கொடுத்த கேரக்டரை மிகவும் சிறப்பாக செய்துள்ளார். கதாநாயகியாக இவானா கோடுத்த கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷின் பாடல்கள் இசையும் ரேவாவின் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இயக்குநர் P V ஷங்கர் ஒரு கிராமத்து வாழ்க்கையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாகசொல்லியுள்ளார்பாரா