Maharaja Movie Review

P A S S I O N S T U D I O S
வழங்கும்,
தயாரிப்பாளர்கள்.
சுதன் சுந்தரம், &
ஜெகதீஷ் பழனிசாமி
தயாரிப்பில்…

F I V E S T A R
K.செந்தில்
வெளியீட்டில்.
நித்திலன் சாமிநாதன்
இயக்கத்தில்…
பாடலாசிரியர்
வைரமுத்து
பாடல்
வரிகளில் .
அஜனிஷ் B. லோக்நாத்
இசையில்..
தினேஷ் புருஷோத்தமன்
ஒளிப்பதிவில்…
பிலோமின் ராஜ்
எடிட்டிங்கில்
கலை இயக்குனர்
V. செல்வகுமார்
கை வண்ணத்தில்…
அனல் அரசு
சண்டை பயிற்சியில்
விஜய் சேதுபதி
அனுராக் காஷ்யப்,
மம்தா மோகன்தாஸ்,
அபிராமி,
நட்டி – நடராஜன்
முனுஷ் காந்த்,
அருள்தாஸ்
என மற்றும் பலர் நடித்து ஜூன்.14ல் வெளியாகும் படம் மகாராஜா.

கதை

விஜய் சேதுபதி சலூன் கடை வைத்து பிழைப்பு நடத்தி தன் மகளை படிக்க வைக்கிறார். மகளுக்கு படிப்பைவிட விளையாட்டில் ஆர்வம். விஜய் சேதுபதிக்கும் அவரது மகளுக்கும் லஷ்மிமேல் கொள்ளை பிரியம். விளையாட்டில் கலந்து கொள்ள மகள் வெளியூர் போகும்போது லஷ்மியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அந்த லஷ்மி காணவில்லை என்று விஜய் சேதுபதி போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே சுவாராஸ்யமான சஸ்பென்ஸ் கலந்த படத்தின் மீதிக்கதை

விஜய் சேதுபதி சலூன் தொழில் செய்பவராகவும் பெண் குழந்தைக்கு தந்தையாகவும் நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். அனுராக் காஷ்யப் வில்லனாக மிரட்டல் நடிப்பை கொடுத்துள்ளார். அபிராமி, திவ்யாபாரதி, மம்தா மோகன்தாஸ் நடிப்பும் அருமை. நட்ராஜ் போலிஸ் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். அருள்தாஸ்,மணிகண்டன்,சிங்கம்புலி, முனுஸ்காந்த் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். அஜனிஷ் B லோகநாத் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் கதையை பக்கா ஆக்ஷனுடன் எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாககொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

#maharajamovie
Comments (0)
Add Comment