சென்னை, ஐ. டி. சி கிராண்ட் சோழாவில் நடைபெற்ற இந்த FAB ஸ்டார்ஸ் ஐகானிக் – 2025 க்கான விருதுகள் ஆற்றல்மிக்க இரட்டையர்களான ஃபைசா கான் மற்றும் அப்துல் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரமாண்டமாக நடைபெற்றது.
நாடு முழுவதிலுமிருந்து திறமைகளை கௌரவிப்பதற்கும் உயர்த்துவதற்கும் தொடர்ந்து தளங்களை உருவாக்கியுள்ள ஃபைசா கான் மற்றும் அப்துல், ஏற்கனவே 4 முறை FAB ஸ்டார்ஸ் ஐகானிக் விருதுகளை திறம்பட நடத்தி பெரும் அங்கீகாரம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சி சினிமா, தொழில்முனைவோர் மற்றும் படைப்பாற்றல் துறைகளில் சிறந்து விளங்குவேருக்கு அங்கீகாரம் அளிக்கும் கொண்டாட்டமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரை நட்சத்திரங்களான டி. இமான், அபிராமி, ஷீலா, உமா ரியாஸ் கான், ஆர். கே. சுரேஷ், நித்யஸ்ரீ, யாஷிகா ஆனந்த், வெற்றி வசந்த் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல, தொழில்முனைவோர் களான ஷா கன்சல்டிங் நிறுவனர் திரு.தேவானந்த் ஷா, NEXUS PR இன் தலைமை செயல் அதிகாரி திரு. இந்திரன் மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோருக்கும் சிறப்பான செயல்பாட்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இதுதவிர பல புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டனர்.
FAB ஸ்டார்ஸ் ஐகானிக் விருதுகள் அங்கீகாரத்தின் கலங்கரை விளக்கமாக தொடர்ந்து பிரகாசித்து வருவதோடு, அந்தந்த துறைகளில் முன்மாதிரியாக திகழ்ந்து, ஊக்குவித்து வழிநடத்தும் நபர்களையும் கொண்டாடுகின்றன