Take a fresh look at your lifestyle.

Pogumidam Vegu Thooramillai Movie Review

130

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் விமல், நாயகியாக மெரி ரிக்கெட்ஸ், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்து ஆகஸ்ட் 23 ல் வெளியாகும் படம் போகுமிடம் வெகு தூரமில்லை’ ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ளார். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

கதை

விமல் மனைவி பிரசவத்திற்கு பணம் தேவைப்படுகிறது. அந்த பணம் சம்பாதிக்க
சென்னையில் இருந்து இறந்த ஒருவரின் உடலை எடுத்துக்கொண்டு திருநெல்வேலி செல்கிறார் ஆம்புலன்ஸ் டிரைவர் விமல். இறந்து போனவர் அங்குள்ள ஊரில் பெரிய மனிதர். வழியில் லிஃப்ட் கேட்டு அந்தவண்டியில் ஏறுகிறார் கருணாஸ். கருணாஸால் சில பிரச்சினையும் விமலுக்கு வருகிறது. அந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு அந்த உடலை எப்படி கொண்டு சேர்க்கிறார் விமல் என்பதுதான், படத்தின் மீதிக்கதை.

விமல் ஆம்புலன்ஸ் டிரைவராக சிறப்பாக நடித்துள்ளார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். கருணாஸ் மிக முக்கியமான கதா பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மேரி ரிக்கெட்ஸ் விமலின் மனைவியாக நன்றாக நடித்துள்ளார். மற்றும் ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி என எல்லோரும் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர். ரகுநந்தன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. டெமில் சேவியர் எட்வர்ட்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன்,  அழகான படைப்பாக இப்படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா. பாராட்டுக்கள்