Take a fresh look at your lifestyle.

வா வாத்தியார் சினிமா விமர்சனம்

8

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் வா வாத்தியார் படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் நலன் குமாரசாமி.

இதில் கார்த்தி – ராமேஸ்வரன் (அ) ராமு வாத்தியார், கிருத்தி ஷெட்டி – வூ , ராஜ்கிரண் – பூமிப்பிச்சை, சத்யராஜ் – பெரியசாமி, ஆனந்தராஜ் – பாபு, ஜி. எம். சுந்தர் – மணி, கருணாகரன் – கோவிந்த ராமன், ஷில்பா மஞ்சுநாத் – மாலினி, ரமேஷ் திலக் – ரமேஷ், நிழல்கள் ரவி – முதல்வர், யார் கண்ணன் – மதி சோழன், நிவாஸ் ஆதிதன் – நிவாஸ், பி. எல். தென்னப்பன் (ராமுவின் தந்தை) – ஜெய் கணேஷ், வித்யா (ராமுவின் தாய்) – சுசிலா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவினர்கள் :- ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஐ எஸ் சி, இசை : சந்தோஷ் நாராயணன், கலை இயக்கம் : டி.ஆர்.கே.கிரண், படத்தொகுப்பு : வெற்றி கிருஷ்ணன், சண்டை: அனல் அரசு, ஒலி அமைப்பு : விஷ்ணு கோவிந்த், பாடல் வரிகள் : விவேக், முத்தமிழ், கெலிதீ, துரை, நடன அமைப்பு : சாண்டி ஃ எம். ஷெரிப், உடை வடிவமைப்பாளர்கள் : பூர்ணிமா ராமசாமி, ஏகன் ஏகம்பரம், பல்லவி சிங், உடைகள் : எல்.தனபால், மேக்கப் : பாரிவள்ளல், சிறப்பு மேக்கப் :​ ரஞ்சித் அம்பாடி, வி எஃப் எக்ஸ் : ஆர். ஹரிஹர சுதன், இயக்க குழு : அருண் நேஹ்ரு, எஸ். ஆண்டனி பாஸ்கர், சிவபிரகாஷ், பி. கவின் கார்த்திக், எம்.டி. இம்ரான், சரண் செல்வராஜ், தயாரிப்பு கட்டுப்பாடு : எஸ். சிவகுமார், தயாரிப்பு நிர்வாகிகள் : ஜி.காமராஜ் – எஸ்.ராஜ்கமல், தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ஈ.வி.தினேஷ் குமார், நிர்வாக தயாரிப்பாளர் : ஏ.ஜி.ராஜா, இணை தயாரிப்பாளர் : நேஹா ஞானவேல்ராஜா, மக்கள் தொடர்பு : யுவராஜ்

எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகரான பூமிபிச்சை (ராஜ்கிரண்) மாசிலா என்ற ஊரில் வசிக்கிறார். இந்நிலையில் எம்ஜிஆர் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, எம்ஜிஆர்; இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து போகும் பூமிபிச்சைக்கு இன்ப அதிர்ச்சியாக அதே நாள், மாதம், நேரத்தில் பேரன் ராமேஷ்வரன் பிறக்க எல்லையில்லா ஆனந்தம் அடைகிறார். எம்.ஜி.ஆரைப் போலவே அவனது உள்ளங்காலிலும் ஒரு மச்சம் இருக்க எம்ஜிஆரின் மறுபிறப்பு என்றெண்ணி அதே கொள்கைகள் மற்றும் இலட்சியங்களுடன் அவரை வளர்க்கிறார். எம்.ஜி.ஆராக இருப்பது வாழ்க்கையின் இன்பத்தை அளிக்காது நம்பியாராக இருக்கவே ஆசைப்பட்டு ஏமாற்றும் நுட்பமான கலையை தாத்தாவிற்கு தெரியாமல் கற்றுக்கொள்கிறார். நாளடைவில் தாத்தாவின் விருப்பப்படி புலியூர் கோட்டம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக ராமேஸ்வரன் என்கிற ராமுவாக(கார்த்தி) பொறுப்பேற்று ஏமாற்றும் திறமையால் ஊழல் காவலராக மாறுகிறார். ஒரு சில சம்பவங்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட, தொழிலதிபர் பெரியசாமியின் (சத்யராஜ்) மகள் மாலினியை (ஷில்பா மஞ்சுநாத்) ஆகியோரை காப்பாற்றும் சூழல் ஏற்பட, அவர்களின் உதவியால் மீண்டும் பணியில் சேருகிறார். 142 மில்லியன் யூரோக்களைக் கொள்ளையடித்து அப்பாவி உயிர்களைப் பலிவாங்க சதி செய்யும் மாநில முதல்வர் (நிழல்கள் ரவி) மற்றும் வணிகதொழிலதிபரான பெரியசாமி ஆகியோர் அடங்கிய சதித்திட்டம் பற்றிய தகவலை வெளியிட்ட மஞ்சள் முகம் என்ற ஹேக்கர் குழுவை விசாரிக்க அவர் நியமிக்கப்படுகிறார். ஆனால் ராமுவும் சதித்திட்டத்திற்கு துணை போவதையறிந்து ராமுவின் உண்மையான முகம் தெரியவர தாத்தா பூமிப்பிச்சை கவலையில் இறந்துபோகிறார். ராமு தாத்தாவின் இறுதி சடங்கில் இருக்கும் போது, பெரியசாமியின் திட்டத்தின்படி ஒரு கட்டத்தில் பிடிபட்ட ராமுவின் ஆட்களை போலி என்கவுண்டர் செய்து தீர்த்துக்கட்ட ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் ராமுவின் உடலில் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்படுகிறது. ராமு ஒரு மாற்று ஈகோ தன்மையுடன் ஊழல் எதிரிகளை வீழ்த்துவதாக சபதம் செய்யும் சாட்டையை ஏந்திய, குதிரை சவாரி செய்யும் எம்ஜிஆராக மாறுகிறார். அதன் பின் என்ன நடந்தது? வாத்தியாராக நல்லதை செய்தாரா? நம்பியாராக கெட்டதை பின்பற்றினாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.