H I P H O P T A M I Z H A
E N T E R T A I N M E N T
வழங்கும்,
ஹிப் ஹாப் தமிழா ஆதி
தயாரிப்பில்….
TENT KOTTA
வெளியீட்டில்….
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை
இயக்கத்தில்..
அர்ஜுன் ராஜா
ஒளிப்பதிவில்…
பிரதீப் E. ராகவ்
எடிட்டிங்கில்….
கலை இயக்குனர்
R.K.நாகு
கை வண்ணத்தில்…
மகேஷ் மேத்யூ
சண்டை பயிற்சியில்…
ஹிப் ஹாப் தமிழா ஆதி,
அனகா,
நாசர்,
நட்டி,( நடராஜ்),
தலைவாசல் விஜய்,
A N.அழகன் பெருமாள்,
விஜயன்,
ஹரிஷ் உத்தமன்,
முனிஷ் காந்த்,
சிங்கம் புலி,
மகாநதி ஷங்கர்,
இளங்கோ குமரவேல்,
கல்யாண் மாஸ்டர்,
சூ கியி ஷீங்,
இளங்கோ குமணன்,
சிவா சாரா RA,FJ,
குஹன் பிரகாஷ்,
ராக்கெட் ராஜேஷ்
என மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
கடைசி உலகப் போர்
கதை
படத்தினுடைய கதை 2028 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. தமிழக முதலமைச்சர் நாசரோட மச்சான் தான் நட்டி. நாசரோட பினாமி, . நட்டிதான் தமிழக ஆட்சியையே உருவாக்கினார் என்பது போல தன்னை நினைத்து கொள்கிறார். இதன்பின் உலகமே தற்போது இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என்று இரண்டாக பிரித்திருக்கிறார்கள். இதில் இந்தியா நடுநிலையாக இருக்கிறது.
இந்த நேரத்தில் தான் முதலமைச்சர் மகள் ஆத்மிகா ஹீரோவான ஆதியை காதலிக்கிறார். இன்னொரு பக்கம் பல லட்சம் கோடிகள் ஒரு ஹார்பர் கண்டெய்னரில் இருக்கிறது. இதை வெளியில் கொண்டுவர நடராஜ் ஒரு மிகப்பெரிய கலவரத்தையே உருவாக்குகிறார். ஆனால், கலவரம் கண்ட்ரோல் மீறி போனதால் ராணுவம் களமிறங்குகிறது. தமிழக முழுவதும் ராணுவத்தின் கண்ட்ரோலில் வருகிறது. அதோடு எதிர்பாராத விதமாக ஆதியை தீவிரவாதி என கைது செய்கிறாராகள்.
இந்த சூழ்நிலையில் ரிபப்ளிக் நாடுகள் இந்தியாவை தாக்க நினைக்கிறார்கள். இதனால் மொத்த சென்னையும் அழிகின்றது. அதற்கு பிறகு என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை.
இந்த படம் முழுக்க நடராஜ் தான் சுமந்து சென்றிருக்கிறார் என்றே சொல்லலாம். ஆதி தன்னை ஹீரோ என்பதை போல் காண்பிக்காமல் நட்டியை தான் காண்பித்து இருக்கிறார். மேலும், நட்ராஜ் தான் கதையை சொல்லி படத்தை சுவாராஸ்யபடுத்தியிருக்கிறார். ஆதியும் நட்டியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக ஆத்மிகா கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். நாசர் முதலமைச்சராக நன்றாக நடித்துள்ளார். மற்றும்
தலைவாசல் விஜய்,
A N.அழகன் பெருமாள்,
விஜயன்,
ஹரிஷ் உத்தமன்,
முனிஷ் காந்த்,
சிங்கம் புலி,
மகாநதி ஷங்கர்,
இளங்கோ குமரவேல்,
கல்யாண் மாஸ்டர்,
சூ கியி ஷீங்,
இளங்கோ குமணன்,
சாரா
குஹன் பிரகாஷ்,
ராக்கெட் ராஜேஷ் என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.
அர்ஜூன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
ஆதி கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் தயாரிப்பு என தன் தோளில் சுமந்து நல்ல படமாக கொடுக்க முயற்சித்துள்ளார். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆதியின் உழைப்புக்காக பார்க்கலாம். பாராட்டுக்கள்.