S R பிரபு தயாரிப்பில் K G பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர், ஷாரா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பிளாக்.
கதை
ஜீவாவுக்கு தன் ஆபிஸில் லீவு கிடைக்க அந்த லீவில் எங்காவது வெளியூர் போகலாம்னு தன் மனைவியான பிரியா பவானி சங்கரை அழைக்கிறார். பிரியா பவானிசங்கரோ புதுசா வாங்கின வில்லாவுக்கு போகலாம்னு சொல்லி ஜீவாவை புது வில்லாவுக்கு அழைத்து செல்கிறார். அங்கு நிறைய வீடுகள் இருக்க முதன் முதலில் இவர்கள் குடி செல்கிறார்கள். அங்கு சில அமானுஷ்ய சக்திகள் நடக்கிறது. அங்கிருந்து ஜீவாவும் பிரியா பவானிசங்கரும் உயிரோடு வந்தார்களா? இல்லையா? என்பதை இயக்குநர் புதுசான ஒரு விஷயத்தை எல்லோருக்கும் புரியும்படி சொன்னாரா? இல்லையா ? என்பதே படத்தின் கதை.
ஜீவாவும் பிரியா பவானிசங்கரும் கணவன் மனைவியாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஷாரா, விவேக் பிரசன்னா என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். கோகுல் பினேயின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது. சாம் சி எஸ்ஸின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
இயக்குநர் KG பாலசுப்ரமணி புதிதாக ஒரு கதை யை தேர்ந்தெடுத்து அதை எல்லோருக்கும் புரியும்படி சொல்ல முயற்சித்திருக்கிறார். பாராட்டுக்கள்
Next Post