Take a fresh look at your lifestyle.

வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!

12

 

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.

இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,

எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன்,  என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்தியைப் பார்த்த போது அவர் முகம் எம் ஜி ஆர் போட்டோவுடன் அப்படியே  மேட்ச் ஆனது. அப்போதே இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் என நலனிடம் சொன்னேன்.  கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.

நடிகர் GM சுந்தர்  பேசியதாவது..,

எம் ஜி ஆர் பற்றி பேச  எனக்குத் தகுதியில்லை, பரம ரசிகர்  சத்தியராஜ் சார் முன் எம் ஜி ஆர் பற்றி எதாவது தகவல் தப்பாகக் கூறி விடுவோம் என பயமாக உள்ளது. அவர் அவ்வளவு தீவிரமான ரசிகர்.  கார்த்திக்கின் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு ஐகானிக் இமேஜை மீண்டும் திரையில் கொண்டு வருவது மிக கடினமான விசயம்.  எம் ஜி ஆராக நடிக்க கார்த்தி நிறைய ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறார். அவரது பாடி லாங்குவேஜு எல்லாம் மிகவும் நன்றாக  இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். முழு அர்ப்பணிப்புடன் உண்மையாக உழைத்தால் தான்  அந்த மாதிரி விஷயங்கள்லாம் வெளிவரும்.  கார்த்தி மிகச்சிறப்பாகச் செய்துள்ளார்.  கிருத்தி ஷெட்டி  வெல்கம் டு தமிழ் சினிமா.  நான்  ஆனந்தராஜனோட கிளாஸ்மேட் ஃபிலிம் இனஸ்டிட்யூட்டில். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இயக்குநர் நலன் அவரது காதலும் கடந்து போகும் படம் போலவே, இந்த படத்திலேயே எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுத்திருக்கார். அவருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் வெளிவருதற்குத் தயாரிப்பாளர்  ஞானவேல் சார் மற்ற எல்லா நடிகர்களும் ஆர்டிஸ்ட் எல்லாருமே சேர்ந்து எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். மிகக்கஷ்டபட்டு  இந்த படத்தைப் பொங்கலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.  நிச்சயமாகச் சத்தியமாக இந்த படம்  மிகப்பெரிய வெற்றி பெறும்.

 

நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது..,

முதலில் எனக்கு மாலினி என்ற கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்காக, எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி   சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. ஒரு கதையை எழுதும்போது, ஒரு கேரக்டர்க்கும் ஒரு ஆர்க் இருக்கும். ஆனால் ஒரு நடிகையா, எனக்கும் ஒரு ஆர்க் வேண்டும், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் செய்ய வேண்டுமென்று  ஆசைப்படுவேன். அதனால் தான் இப்படத்தில்  இந்த மாதிரி ஒரு ரிஸ்க் எடுத்தேன். அந்த ரிஸ்க் எடுக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதனால தான் மாலினி இவ்வளவு அழுத்தமான ஒரு கேர்கடராக மாறியிருக்கிறாள். இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரின் முயற்சியையும் உழைப்பையும் முதலில் பாராட்ட வேண்டும். இந்த படம் பெரிய சிக்கல்களைச் சந்தித்தது. எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி   சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி ஒரு பெரிய மேடையில், இந்த அளவுக்கு இந்த படம் நிற்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமும் அவர்கள்தான். படக்குழுவிற்கு நன்றி.  எனக்கு வரும் படங்கள் ஏதாவது ஒரு காரணமாகத் தான் வரும். இந்தப் படம் ஒரு ஸ்டார் படம். தமிழ்நாட்டில் இது ஒரு பெரிய திருவிழா வெளியீடாக இருக்கும்,  அதனால்  இதுபோன்ற ஒரு படத்தைத் தேர்வு செய்வது ரொம்ப சிக்கலான விஷயம். ஆனா எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறது. இந்த படம் மிக நன்றாக வந்திருக்கிறது. நீங்க எல்லாரும் இந்த படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,

இந்த படம் ஒரு நல்ல படம். நீங்களும் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும். நாளைக்கு இந்த படம் வெளியாகப் போகிறது. அதுவும் ஒரு நல்ல நாளில், ஒரு நல்ல நேரத்தில் வெளியாகிறது. நான் தயாரிப்பாளர் ஞானவேல்  சார்கிட்ட கூட “சார், முன்னாடி சொன்ன தேதியை விட, நாளைக்கு ரிலீஸ் ஆகுற தேதியே ரொம்ப நல்ல தேதிங்க” என்று சொன்னேன். நாளை போகி பண்டிகை. பழசுகளை எல்லாம் எரிச்சிட்டு, புதுசா ஆரம்பிக்கிறதுதான் நம்ம கலாச்சாரம். அதனால் நாளைக்கு நம்ம மனசில் இருக்கிற எல்லா…
[12:54, 1/16/2026] UVC Atchaya UVC: Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு சர்வதேச பாராட்டு !!

உலகளாவிய திரைப்பட தளமான Letterboxd தளத்தின் டாப் டென்னில் இடம்பிடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!

சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Highest Rated Comedy Films of 2025 தரவரிசைப் பட்டியலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் Top 10 பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளமாகும். பயனர்களின் மதிப்பீடுகள், விமர்சனங்கள் மற்றும் பார்வை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிடும் இந்த தளம், சர்வதேச அளவில் பெரும் நம்பகத்தன்மை பெற்றுள்ளது. அந்த வகையில், காமெடி எண்டர்டெயினர் பிரிவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பெற்றுள்ள உயர்ந்த இடம், உலக ரசிகர்களிடையே இப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

இலங்கை மக்களின் வலியை அவர்களின் வாழ்வினை, குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடி–கமர்ஷியல் கலவையுடன் சொல்லியிருப்பதே ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யின் பெரிய பலமாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். வலுவான கதை அமைப்பு, எளிமையான ஆனால் தாக்கமுள்ள திரைக்கதை, மனிதநேய உணர்வுகள் ஆகியவை பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் அசத்தலான இயக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Letterboxd வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் டாப் டென் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் என்பதும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் அபிஷன் ஜீவிந்த் பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரத்தை பெருமைகொள்ள வைக்கிறது.

2025 ஆம் ஆண்டில் வெளியான முக்கியமான தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, வரும் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் மேலும் பல விருதுகளை வெல்லும் என்ற நம்பிக்கையை திரை ஆர்வலர்களிடையே உருவாக்கியுள்ளது. குறிப்பாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு குவியும் பாராட்டுகள், அவரை எதிர்கால தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவுக்கு காமெடி எண்டர்டெயினர் வகையில் கிடைத்த இந்த சர்வதேச அங்கீகாரம், ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.