இயக்குநர் கார்த்திக் யோகி சந்தானத்தை வைத்து “டிக்கிலோனா” என்ற படத்தின் மூலம் நகைச்சுவை ட்ரீட் கொடுத்திருந்தார். இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தினை கொடுத்துள்ளது.
கதை
1974 ல் நடக்கும் கதை.
வடக்குப்பட்டி என்ற கிராமத்தில் தன்னுடைய குடும்ப வறுமையால் சிறுவயதில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் பானை தொழில் செய்யும் ராமசாமி (சந்தானம்). ஊரே காட்டேரி என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்பாராத தருணத்தில் தற்செயலாக
திருடன் தன் வீட்டில் இருந்து பானையை திருடி வரும்போது
சந்தானத்தின் பானையால் காட்டேரி வீழ்த்தப்படுவதால், கிராம மக்கள் அந்த பானையையே அம்மனாக வழிபட தொடங்குகின்றனர். மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி பானையை வைத்து ஒரு சிறிய கோயிலை கட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார் ராமசாமி.
அப்போது ஊருக்கு வரும் தாசில்தார் சந்தானத்தின் நிலை தெரிந்து கோவில் நிலத்தை குத்தகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என சந்தானத்திற்கு ஐடியா கொடுக்கிறார். அதற்காக பெரும் தொகையை கமிஷனாக கேட்கிறார்.
உனக்கு நான் எதுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்கிறார் சந்தானம் இதனால் கடுப்பான தாசில்தார் ராமசாமியின் வருமானத்தில் கை வைக்கத் துடிக்கிறார்.
ஒரு கட்டத்தில் சந்தானத்தின் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிப்பதில் சந்தானத்துக்கும் அந்த ஊர் தாசில்தாருக்கும் (தமிழ்) இடையே நடக்கும் மோதலில் கோயில் சீல் வைக்கப்படுகிறது.
ஊர்மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் மீண்டும் கோயிலைத் திறக்கமுடியும் என்ற சூழலில் அதற்காக
சந்தானம் ஒரு பிளானை போட்டு கோவிலை திறக்க முயற்சி செய்கிறார். அவருடையர முயற்சி பலித்ததா? தாசில்தார் என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை
சந்தானம் நக்கல், நையாண்டி என வடக்குப்பட்டி ராமசாமி ஆக ரசிக்க வைத்திருக்கிறார்
சந்தானம் ‘ஏ1’, ‘தில்லுக்கு துட்டு’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அந்த படங்களில் காமெடி காட்சிகளை தாண்டி ஒரு நல்ல கதையும், அதற்கான சுவார்ஸ்யமான திரைக்கதையும் உள்ள இப்படத்தில் சந்தானம் படம் முழுக்க தான் மட்டுமே ஸ்கோர் செய்யாமல் தன்னோடு நடிக்கும் மற்ற கதாபாத்திரங்களுக்கும் போதுமான ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார்.
ஹீரோயின் மேகா ஆகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் தங்கள் நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். நிழல்கள் ரவி வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பு சத்தம்.
சந்தானம் படங்களில் தவறாமல் இடம்பெறும் மாறன், சேஷு வெளுத்துகட்டியிருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் ஜான் விஜய், ரவி மரியா, பிரசாந்த், கூல் சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர் என பெரும் பட்டாளமே இருக்கிறது. அனைவருமே நிறைவான காமெடி கதாபாத்திரங்களாக மனதில் பதிகிறார்கள்.
ஈகோ மோதலில் ரவி மரியா – ஜான் விஜய் செய்யும் அலப்பறைகள் ரசிக்கவைக்கிறது.
ஷான் ரோல்டனின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. தீபக்கின் ஒளிப்பதிவும் சிவனாண்டீஸ்வரனின் எடிட்டிங்கும், ராஜேஷின் கலை இயக்கமும் படத்திற்கு பலம்.
ஊரின் வரலாறு, கோயில் உருவாகும் குட்டி பிளாஷ்பேக், கோயில் வைத்து சந்தானம் செய்யும் தில்லாலங்கடி வேலைகளையும்யும் அதே நேரம் கதாபாத்திரங்களையும் கொண்டு காமெடி பட்டாசு கொளுத்தியிருக்கிறார் இயக்குநர்
கவலையை மறந்து சந்தோஷமாக சிரித்துவிட ஆசைப்படுபவர்கள் வடக்குப்பட்டி ராமசாமி பார்த்து ரசிக்கலாம்.