ஒவ்வொரு நடுத்தர குடும்பத் தலைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது இது கற்களை கொண்டும் மணலைக் கொண்டும் கட்டுவது மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் கனவோடு கலந்த ஒரு ஏக்கம் என்பதைத்தான் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.
அக்கவுண்டன்ட்டாக ஒரு லோடு கம்பெனியில் வேலை செய்கிறார் சரத்குமார். தன் மனைவி தேவையான மகன் சித்தார்த் மகள் ஆர்த்தி ஆகியோருடன் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
மொத்த குடும்பமும் ஒரு சொந்த வீடு வாங்க ஓடுகிறார்கள் பல வழிகளில் சேமிப்பு திட்டங்களை போட்டாலும் நடுத்தர செலவுகள் அவர்களுடைய கனவுகளை கலைக்கின்றன.இதைத்தான் BHK சொல்லுகிறது.
சரத்குமாரின் நடிப்பு அபரிவிதமானது தன்னுடைய கண்ணீரை தனக்குள் ஒலித்துக் கொண்டு என்ன போல ஆயிடாதப்பா என்று மகனைப் பார்த்து சொல்லும் வசனம் தன்னுடைய
பரிதவிப்பின் உச்சம்.
சித்தார்த்தின் நடிப்பு மெச்சக்கூடியது . அப்பா நான் ஜெய்ச்சிடுவேன் பா …சரிப்பா என்னும் வசனங்கள் ஒவ்வொரு இளைஞனின் பொறுப்புணர்ச்சியை காட்டுகிறது.
அடுத்து சைத்ரா ஜே ஆச்சார் ஐஸ்கிரீம் மணி அடிக்கும் காட்சியில் சித்தாத்துக்கும் இவருக்குமான காதல் ரொமான்ஸ் உருவாக்க வைக்கிறது.
தேவயானி நடிப்பு சாந்தியாக தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார் யோகி பாவியின் கலகலப்பு ரசிக்கும் படி உள்ளது.
மொத்தத்தில் வாடகை வீட்டின் கஷ்டங்களும் குறுகிய சுவர்களும் தங்களுடைய கனவு வீட்டின் கற்பனைகளுக்குள் ஊடுருவி இருக்கிறார் தினேஷ் கிருஷ்ணன்-ஜீத்தின் ஸ்டானிஷ்லெஸ் கூட்டணியில் ஒளிப்பதிவு சூப்பர்.
கதைக்குத் தேவையான காட்சிகள் தொல்லை செய்யாத பாடல்கள் மெச்சக்கூடியது.
மொத்தத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின வலிகளையும் கனவுகளையும் உணர்வு பூர்வமாக காட்டியிருக்கும் அனைத்து நடிகர் நடிகைகளையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் பாராட்டிய ஆக வேண்டும் மொத்தத்தில் படம் பாராட்டக்கூடியது.