புதிய சிந்தனை அருமையான திரை கதையுடன் வெளிவந்திருக்கும் படம் மாரிசன். பகத் பாசில் வடிவேலு நடித்திருக்கும் இந்த திரைப்படம் . அடுத்து என்ன அடுத்து என்ன என ரசிகர்களை தூண்டச் செய்யும் கதையாக அமைந்துள்ளது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியில் வரும் தயாளன் பழைய திருட்டு புத்தி மாறாமல் வீட்டுக்குள் புகுந்து திருடும் எண்ணம் கொண்டு ஒரு வீட்டுக்குள் செல்கிறான். போகும் வழியில் ஒரு பைக்கை திருடி அதனுடைய நம்பர் பிளேட்டுகளை மாற்றி வண்டியை எடுத்துக்கொண்டு அந்த வீட்டுக்கு சென்றவன் அந்த வீட்டில் அல்சைமர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட வடிவேலுவை சந்திக்கிறார் வடிவேலு தன் மகன் தன்னை கஷ்டப்படுத்துவதாகவும் அதனால் கைகளை சங்கிலியில் கட்டிப்போட்டு விட்டு சென்றுள்ளதாகவும் சொல்ல என்னை எப்படியாவது வெளியே கொண்டு வா உனக்கு பணம் தருகிறேன் என்று 25000 ரூபாய் பேரம் பேசி தயாளை கெஞ்சுகிறான் தயாளுவும் விடுவித்து பைக்கில் அழைத்துச் செல்கிறான். திடீரென தயாளனை தன் மகன் என்று நினைத்து தன் மகன் பெயரை சொல்லி அழைக்கிறான். ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது வேலாயுதத் இடம் 25 லட்சம் இருப்பதை தயாளன் தெரிந்து கொள்கிறாள் .எடுக்க செல்லும் வழியில் எல்லாம் ஏதேதோ வழிகளில் முயற்சி செய்ய பின் நம்பர் தெரியாமல் வேலாயுதம் தவறான நம்பர் கொடுத்து தனக்கு மறதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் இதற்கிடையில் இவர்கள் தங்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கொலை நடக்கிறது போலீசாரும் தயாளன் பைக்கின் ஜிபிஎஸ் நம்பர் ஐ வைத்து பின் தொடர்கிறார்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒரு கொலை நடக்கிறது.
கொலைகளை செய்தது யார். தயாளனுக்கும் இந்த கொலைகளுக்கும் சம்பந்தம் உண்டா.
வேலாயுதத்தின் பணத்தை தயாளன் திருடினாளா இல்லையா என்பதை படம் முழுவதும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லி இருக்கிறார்கள் கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம் குடும்பம் குடும்பமாக எந்த வயது வரம்பின்றி இந்த படத்தை ரசிக்கும் படியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களையும் நாம் வாழ்த்தலாமே