காலைகம்மாய் பட்டி அப்படிங்கிற கிராமத்தில் ஒரு பெரிய கல் இரண்டாக உடைந்து விழுகிறது .ஒரு பக்கம் விழுந்த கல்லை இதுதான் எங்கள் சாமி என்று சொல்ல, இன்னொரு பக்கம் விழுந்த கல்லை இதுதான் சக்தி வாய்ந்த எங்கள் தெய்வம் என்று இன்னொரு சாரரும் சொல்ல ,இப்படியே இந்த பிரச்சனை பெரிய கலவரமாக மூழ்கியது ,கடைசியாக ஒரு கட்டத்தில் காலைகம்மாபட்டி என்ற கிராமம் இரண்டாகப் பிரிந்து காலைப்பட்டி… கம்மாய் பட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிந்து விடுகிறது .இப்படி பிரிந்து கிடக்கும் கிராமங்களை எப்படியாவது நாம சாவுறதுக்குள்ள ஒன்னு சேர்க்க வேண்டும் என்று காலிவெங்கட் ஆசைப்படுகிறார். கடைசியில் இந்த கிராமங்கள் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பது தான் படத்தோட ஒட்டுமொத்த கதையே. இந்தப் படத்தில் தலைப்பு பாம் இதை யாரும் எதிர்பார்க்காத தலைப்பாக நகைச்சுவையுடன் சொல்கிறார்கள்.
ஜாதி மதம் இதையெல்லாம் பாக்காதீங்கடா… மனுஷனா இருங்கடா என்று நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர் விஷால் வெங்கட்.
அடுத்து இந்த படத்தில் அர்ஜுன் தாஸின் கதாபாத்திரத்தை சொல்லியே ஆக வேண்டும் .இதுவரை பார்த்து பழக்கப்பட்ட சிட்டிபாயாக வரும் அர்ஜுன் தாஸ் ,அந்த பேஸ் குரல் இந்த படத்தில் இல்லை என்றே சொல்லலாம், எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அமைதியாக அணுகக் கூடிய அருமையான கதாபாத்திரத்தில் அர்ஜுன்தாஸ் நடித்திருக்கிறார்.
அர்ஜுன் தாசின் வெகுளித்தனமான நடிப்பு படத்துக்கு ஒரு பிளஸ் பாயிண்ட், அதே நேரத்தில் தன்னுடைய நண்பன் காளி வெங்கட்டுக்கு ஒரு பிரச்சனை என்னும் போது கதறி அழும் அந்த காட்சியாகட்டும் கிளைமேக்ஸ் காட்சியிலும் அர்ஜுன் தாசின் கதாபாத்திரம் பிரமிக்கத்தக்கதாக உள்ளது. மொத்தத்தில அவருடைய திரைப்பட கேரியரில் இந்தப் படம் வித்தியாசமான அணுகுமுறை.
காளி வெங்கட் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் ஈசியாக தோன்றினாலும் மிகவும் கடுமையானது,அருமையாக செய்திருக்கிறார்.
அதுபோக இந்த படத்தில் நடித்த ராஜ்குமார், நாசர், அபிராமி, பால சரவணன், சிங்கம்புலி ,ராட்சசன் சரவணன், அந்தச் சின்ன பசங்க நடிப்பாகட்டும் அவங்க அவங்க கதா பாத்திரத்தை அருமையா தெளிவா வெளிப்படுத்தி இருக்காங்க.
இந்தப் படத்தோட பெரிய ஒரு பலம் இன்ட்ரோல் பிளாக்கும்… படத்தோட கிளைமாக்ஸ் தான்.
நல்ல அட்டம்ப்ட் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் நேர்த்தி படத்தை பார்க்க தோன்றும் இடம் என்று சொல்லலாம்.அடுத்த டி. இமான் இசை. கொட்டு அடிக்கிற காட்சியில அசத்தி இருப்பாரு.
மொத்தத்துல இந்த படத்தை பாராட்டியே ஆக வேண்டும்.
எந்த அடல்ட் கன்டென்ட் இல்லாம குடும்பத்தோட வந்து இந்த படத்தை பார்க்கலாம் வாழ்த்துக்கள்.