பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் பின்னணி இசையுடன் இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ டீசர் வெளியாகியுள்ளது!

94

தீவிரமான கதைக்கரு கொண்ட படங்களை இயக்குவதில் ஆர்வமுள்ள இயக்குநரான அஜய் பூபதி மற்றுமொரு கிராமிய ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘செவ்வாய்கிழமை’ மூலம் அனைவரையும் கவர இருக்கிறார். முன்னதாக வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் படத்தின் உள்ளடக்கத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இப்போது, படக்குழு ஒரு அற்புதமான டீசர் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

டீசருக்கு ‘Fear In Eyes’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல, டீசரில் கிராமவாசிகளின் கண்களில் பயத்தை காட்டும் மிரட்டும் காட்சிகளுடனும் முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் வகையிலும் டீசர் வெளியாகியுள்ளது. ‘காந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை டீசரின் காட்சிகளுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் டீசரில் சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே, அஜய் பூபதியின் இந்த கிராமத்து ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான ‘செவ்வாய்கிழமை’ படத்துக்கு இருந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தற்போது வெளியாகியுள்ள டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

தயாரிப்பாளர்கள் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் பேசுகையில், “தான் ஒரு திறமையான இயக்குநர் என்பதை அஜய் பூபதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். சிறந்த உள்ளடக்கத்துடன் கூடிய கமர்ஷியல் படத்தை உருவாக்கியுள்ளார். இது தெலுங்கில் இருந்து அடுத்த கட்ட படமாக இருக்கும். தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் படத்தின் டீசரே இதற்கு சான்று. படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை முழு வேகத்தில் செய்து வருகிறோம். படம் குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும்” என்றனர்.

இயக்குநர் அஜய் பூபதி பேசுகையில், “எங்களது ‘செவ்வாய்கிழமை’ திரைப்படம் கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. நம் மண்ணுடன் கலந்த உண்மையான உணர்ச்சிகளுடன் கதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ‘காந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்” என்றார்.

அஜய் பூபதியின் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் மற்றும் சுவாதி ரெட்டி குணுபதி, சுரேஷ் வர்மா எம்-ன் முத்ரா மீடியா ஒர்க்ஸ் ஆகியவை இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் படம் வெளியாக உள்ளது.